கையூட்டு

கையூட்டு
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

இகந்துழி (தொலைவான இடம்)அல்ல இன்னும் இன்னும் தூரம் தான் -இயலாது
இந்தியா நினைத்திடும் வல்லமை அடைந்திட
ஊகை (கல்வி)பெறுவது உயர்வுக்கு என்பது போய் -- மனிதன்
வாகை சூடுகிறான் வாங்கும் கையூட்டில்

கையூட்டுப் பைக்கம்(பிச்சை) பைகளை நிறைக்காமல் --அதிகாரி
கையெழுத்துப் பேனா மைதனை கக்காது
வகந்தம்(காற்று) கூட வாங்கித் தான் ஆகனுமாம் --சொல்கிறான்
காற்றின்றி வாழலாம் காசின்றி எப்படி

சட்ட ஒடிசிலில்(கவணில்) ஓட்டலாம் குற்றத்தை --கூரிய
பணக்கத்தி அறுத்திடும் கயிர்தொடுக்க ஆளில்லை
கழுமம் (குற்றம்)என்றறிந்தும் கையூட்டு மளியவே - உணவுக்காய்
உழுபவன் தவிர்த்திங்கு உலகமே அழுக்குதான்

ஏழைதான் நேர்மைசெய் ஏகடியம்(கிண்டல்) பேசுவான் -- இவன்
கோழைப் பயலென கொக்கரித்துத் தூற்றுவான்
நகழ்வு (துன்பம்)என்பது நாடிங்கு முழுமையும் -- பச்சையாய்
நிகழ்வதைத் தடுத்திட நீ நான் என் செய்ய


தேடிய பணத்தை தின்ன வழிதேடு -- அதற்குள்
திவ(துவ)ளுதல் நிகழ்ந்திடின் மாத்திரையே சோறு
கலவம்(மயிலிரகு)என்பது காற்றிலும் மென்மைதான் --தொடர்ந்திடின்
அச்சாணி உடையயில் அதன்நிறை தெரிந்திடும்

இயவு (வழி) என்பது இல்லாமல் இல்லை -- இறைவா
இன்னொரு காந்தி பிறவாமலா போவான்.
அம்மணமாய் திரியும் அர்த்தமற்ற உலகத்தில் -- மடையனாய்
எனக்கெதற்கு கோவணம் நான் கூட துவள்(குழை)கிறேன்

💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰

எழுதியவர் : க. செல்வராசு (25-Jun-23, 3:54 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 47

மேலே