வலி

என் தந்தையின்
வியர்வைத்துளிகளைப் பிடித்து நான் மெல்ல மெல்ல நடக்கப் பயின்றேன்
இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறேன் திரும்பிப் பார்க்கிறேன் என் தந்தை என்னோடில்லை
எங்கோ ஒரு வாழ்க்கை வளைவில் அவரை நான் தவற விட்டுவிட்டேன்...

கவிஞர் செல்வா
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Jul-25, 9:27 am)
Tanglish : vali
பார்வை : 26

மேலே