வடிக்காது மற்றுமோர் இன்பக்கவி
உன்னையும் என் காதலையும்
மட்டுமே கவியாய் வடித்த
என் கரங்கள் ஏற்றது ஓர் சபதம்
வடிக்காது மற்றுமோர் இன்பக்கவி...
எனை பிரிந்து உன்னவரின் கரம்
பற்றியமையால்...
இது பொறாமையாலல்ல
என் காதலியின் இடத்தை
வேறோர் பெண்ணோ
அன்னவரின் மனைவியான நீயும்
நிரப்பமுடியாமையால்...