குறையொன்றுமில்லை
ஒரு வேளை உணவின்றி
ஏங்கும் வயிறுகள்
ஆயிரமிருக்க,
நாளுக்கு
மூன்று வேளைகளையும்
தாண்டி
வீங்கிய வயிறுகளுடன்
வெட்கமில்லாமல்
நாம்(ன்)
தலைக்கு மேல்
ஒர் கூரையில்லாமல்
தவிக்கும் குடும்பங்கள்
பல இருக்க,
தலைமுறைகட்கு
சொத்து சேர்க்கும்
ஆசையில் உறக்கமில்லாமல்
நாம்(ன்)
மாற்றுத்துணி இல்லாமல்
ஒற்றைத்துணியிலே
ஓராண்டை கடத்துவோர்
நமைக்கடந்து செல்ல,
அலமாரி அலற
துணிகள் நிறைந்திருந்தாலும்
மீண்டும் மீண்டும்
துணிக்கடைகளில்
மனநிறைவில்லாமல்
நாம்(ன்)
பிற உயிர்களை
அதன் பிறப்பு முதல்
ஆயுட்கைதிகளாய்
கட்டி வைத்து
ஒரு வேளை உணவுக்காக
இரக்கமில்லாமல்
வெட்டித்தின்று,
இரக்கத்தின் வடிவாய்
இறைவன் என்றொருவனை
நாமே உருவாக்கி
அவனிடம்
நமக்கு மட்டும் இரக்கம் காட்டச்சொல்லி,
தன்னலக்காரர்களாய்
நாம்(ன்).
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
