ராகசெலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராகசெலா |
இடம் | : நியூஜெர்சி மாகாணம், அமெரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
\\\\r\\\\n\\\\r\\\\n
மழலையாய் மலர்ந்த போது
மகிழ்ந்தோம்,
இளைஞனாய் வளர்ந்த போது
கொண்டாடினோம்.
முதுமையில் தளரும் போது
மட்டும் ஏன் அதிர்ச்சி?
தேவை
அதை வரவேற்கும் முதிர்ச்சி.
புருவம் நரைக்கும் பருவம்
அனுபவித்தால்
முதுமையும் புதுமையே!
என் இமைகள் எழ, அவற்றுடன்
நானும் விழித்தெழ
தொடங்கியது வழக்கமான
எனக்குப் பழக்கமான
நாள்.
கட்டிலை விட்டு இறங்கவா?
இன்னும் கொஞ்சம் உறங்கவா?
யோசிக்கிறேன்.
ஆனால் நடக்கத்தொடங்குகிறேன்
அறையை விட்டும் சென்று விட்டேன்
ஆச்சரியம்! கால்கள் தரையில் படவில்லை.
மறுகணம் இது நனவல்ல
கனவென்று உணர்ந்தேன்
மீண்டும் இமைகள் எழ
நானும் எழ
நனவுலகம்
என் கனவுலகை
வென்றது
என் கால்கள் அறையை விட்டுச்சென்றது.
விளை நிலங்கள்
விலை நிலங்களான போது !
மரங்கள் நின்ற இடத்தில
அடுக்கு மாடிக்குடியிருப்பின் தூண்கள்.
பறவைகளின் கூடுகளை அழித்து
மனிதர்கள் வசிக்கும்
அபார்ட்மெண்ட் கூடுகள்
மழை நீர் பருகிய நிலத்தின் வாய்
கான்கிரீட் கொண்டு நிரந்தரமாக
அடைக்கப்பட்டது.
நிலத்தின் நீண்ட கால
நீர் சேமிப்பும் சுரண்டப்படுகிறது.
சொந்த இல்லம் வாங்க எண்ணி
நொந்த உள்ளங்களே
நம் கனவு இல்லம் நனவாவது
அவ்வப்போது கனவில் மட்டுமே
விலை இறங்குமா?
வேள்விகளாலும் பதில் கிடைக்காத
கேள்வி
சுனாமி அலை போல்
விலை உயர்ந்தாலும்
பினாமியில் வாங்குவோரும்
உள்ளவரை
எங்கள் கனவு இல்லம்
என்றும் கனவாகவே!