முதுமையும் புதுமையே
மழலையாய் மலர்ந்த போது
மகிழ்ந்தோம்,
இளைஞனாய் வளர்ந்த போது
கொண்டாடினோம்.
முதுமையில் தளரும் போது
மட்டும் ஏன் அதிர்ச்சி?
தேவை
அதை வரவேற்கும் முதிர்ச்சி.
புருவம் நரைக்கும் பருவம்
அனுபவித்தால்
முதுமையும் புதுமையே!