kalkish - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kalkish |
இடம் | : சேலம்,தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 16-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 686 |
புள்ளி | : 245 |
எனக்கு நானாக சூட்டி கொண்ட புனைபெயர்தான் கல்கிஷ்.
எனது இயற்பெயர் ஹரிஷ் .வ ,புத்தக பிரியன்,பொறியாளன்.
எனது படைப்புகளை பிற படைப்பாளிகளுடன் பகிர்ந்திடவும் ,அவர்களின் படைப்புகளை அறிந்திடவும் வாய்ப்பளிகின்ற எழுத்து.காம் உரிமையாளருக்கு எனது மரியாதைக்குரிய நன்றிகள்.
நான்
என் மனைவி
என் பிள்ளை
என் தாய்
என் தந்தை
என் தம்பி
என் தங்கை
என் அண்ணன்
என் அக்கா
என் நண்பன்
என் எதிரி
என் தோழி
வந்தே மாதிரம்..!!
நான்
என் சித்தப்பா
என் சித்தி
என் மாமா
என் அத்தை
என் பெரியப்பா
என் பெரியம்மா
என் பாட்டி
என் தாத்தா
என் அத்தை பொண்ணு
என் மைத்துனன்
என் ஆசிரியர்
என் காதலி
என் முன்னாள் காதலி
என் முன்னாள் முன்னாள் காதலி
ஓம்..!!
நான்
என் புத்தகம்
என் கணினி
என் அலைபேசி
என் குறிப்பேடு
என் காலண்டர்
என் கடிகாரம்
என் அறை
என் படுக்கை
என் தலையணை
என் ஆடை
என் உள்ளாடை
என் எழுதுகோல்
என் சீப்பு
என் தட்டு
எ
சொல்வதற்கு ஒன்றுமில்லை..
ஏனெனில் கேட்போர் யாருமில்லை..
சொல்வதற்கு சிறிது இருக்கிறது..
கேட்பதற்கு சிலர் இருந்தனர்..
சொல்வதற்கு நிறைய இருக்கிறது..
கேட்பதற்கு ஏராளமானோர் இருந்தனர்..
இப்போது புரிகிறது,
சொல்வதும்,கேட்பதும்
வேறுவேறு இல்லையென்று..!!
* * *
விடைகளை தேடுவது ஒரு வழி..!
வினாக்களை மாற்றுவது ஒரு வழி..!
* * *
இறப்பை சுமந்தால் ,சாவு..
இரைப்பை சுமந்தால் ,வாழ்வு..
இவ்வளவுதான் வித்தியாசம்..!!
* * *
கிழக்கையும்,மேற்கையும்
படைத்த
சூரியனை,
சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்றும்
சூரியன் மேற்கில் மறைகிறான் என்றும்
திரித்து வைத்ததில்
தொடங்கியது,
மனித அரசியல்..!
மாதாந்திர வலியொன்றைச்
சுமக்கும் அடிவயிற்றில்
கலந்துவிட்டிருக்கும் உதிரமாய்
கழிவுபட்டிருக்கிறது
மன ஓட்டம்
அது சிடுசிடுவென
உண்ணத் துவங்குகிறது
சினக் குவியலுக்குள்
தொண்டையெடுத்ததாய்
தனிமைக்குத் தேவையற்ற
வெளிச்ச முகத்தைக் காட்டும்
தெருவிளக்கில்
மின்சாரமென அச்சுறுத்துகிறது
பின் தலை துவட்டிக் கொள்ளும்
அதன் ஈரநுனிகளில்
இரண்டிரண்டாய் வெட்டுப்படுகிறது
முட்டியில் பொதி சுமக்கும்
கழுதையெனக் கத்துகிறது
இரங்கலும் இனவாதமுமாய்
எடுத்தியம்பக் கேட்கும்
தன் குரலைத் தணித்துக்
கலவரமாகும்
அம்மன ஓட்டம்
பிரியம் கொண்டதாய்
உலகம் சுற்றத் திரளுகிறது
ஆக்கிரமிப்புகளைத் தவிர
பூனை தன் பாதங்கள்
எழுப்பிய சப்தங்களை தரையை நாவால் நக்கி
சிறையிட்ட ஒருபொழுதில்,
அதிகாரமாய் அன்பு செய்தவர்களும்,
அகங்காரமாய் அன்பு செய்தவர்களும்,
ஆர்ப்பாட்டமாய் அன்பு செய்தவர்களும்,
அவசரமாய் அன்பு செய்தவர்களும்,
துயிலுருகின்றனர்..
சற்று நேரத்தில் வெய்யிலில்
பிறப்பெடுக்க காத்திருக்கும்
நிழல்கள் அவர்களில்
கருவுற்றுறிருந்தன ..!!
சில நூறு ரத்த துளிகளை,
சில நூறு கண்ணீர் துளிகளை,
சில நூறு உயிர்வித்துகளை
சேகரித்தபடி நகருகிறது இவ்விரவு..!!
உறக்கம் கலைந்து
உயிர்த்தெழுந்த பொழுதொன்றில்
மௌனம் சுமந்த காற்று
ரகசியமொன்றை காதருகே கூறி சென்றது..
தெருவில் முப்பத்தியேழு யோனிகள்
இரவில
பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்..!
பிரதி மாதம்
மூன்றே நாட்கள்...!
பால் மணம் நுகராது
பாசமது தீண்டாது
பாதைகளில் ஊர்வலமாய்
பாவத்தின் சம்பளங்கள்..!
தொட்டில் சுகம் அறியவில்லை
தொட்டணைக்க அன்னையில்லை -குப்பைத்
தொட்டிக்குள் தம் வாழ்வை
தொலைத்தன இன்னுயிர்கள்..!
அழுக்கடைந்த மேனி
அம்மணமாய் ஆடை
அருவருக்கும் தோற்றம்
அகம் எங்கும் ஏக்கம்..!
பிஞ்சுக் கரங்களிலே
பிச்சைப் பாத்திரங்கள்
பிழையறியா நெஞ்செங்கும்
பிறர் செய்த தாக்கங்கள்..!
சொந்த நாட்டில் அகதிகளாய்
சொந்தமறியா அனாதைகளாய்
சொல்லொண்ணா சோகத்திலிந்த
சொர்க்கத்தின் தூதுவர்கள்..!
தவறுகள் யாரோ செய்ய
தண்டிக்கப்பட்ட நியாயங்களோ
தரணியிலே ஈனமாய்
தவிப்புகளே மீதமாய்..!
இச்சை கொ