சூரியபிரபா ராஜேந்திரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சூரியபிரபா ராஜேந்திரன் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 10-Apr-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 332 |
புள்ளி | : 33 |
தமிழச்சி என்பதில் பெருமை படுகிறேன்... ..அறிவியல் ஆராய்ச்சி செய்தாலும் தமிழ் தன்னில் கொண்ட ஈர்ப்பு குறையவில்லை......
கோடி கோடி ஆசைவிதை அலங்காரத்துடன்
பூமியில் குதித்து கொண்டதடா காதல் - அன்பே.!
காணும் மனமெல்லாம் காதல் மானம் பொழிய
மும்மூர்த்திகளால் வரம் பெற்று நிற்கிறது காதல் ஜோதி.!
பாரடா பாரினில் ஈன்ற தாய் சேய்யிலும்
முதுவேனிலும் இலையும் மலருமாய் மணக்கும்
ஒரு குர்ரான்,, ஒரு பைபிள்,, ஒரு மகாபாரதம்,,
காதல்... காதல்... காதல்... காதல்.. - நீங்கதே.!!
நம் ஜோடி நெஞ்சுக்குள் வர்ணம் தீட்டி
வர்ணத்தில் காதல் தெப்பமாய் உயிரை ஊற்றி
நம் மார்பில் கை வைத்து - அன்பே ..!
காதல் விளைச்சல் ஆவோம் - அருவியென.!
அறியாமல் பொய் சாய்ந்த காதல் மழை
அறிந்தே அறையும் காதல் வலி
உயிர் வாழா,, காதல் வாழ,, - பெற்றோரே..!
ஒரு
ஜீன்ஸ் போட்ட
சர்ப்பம் ஒன்று
காற்றாய் கரைந்து
என் ஜன்னல் வழியாய்
அறையில்
நுழைந்து
ஆழம் நிறைந்த
கண்கள் கொண்டு
பெண்ணாய் மாறி
மென்மையாய் என்னை
நெருங்கி வந்து
முத்தமிட்டால்!!!
என்
தவம் களைந்து
கவனம் இழந்து
வாழ்க்கை தொலைந்து
வறுமை கோளம்
தரித்து நின்றேன்!!
மற்றொருநாள்
புடவை கட்டிய
தெய்வமொன்று- பெண்
உருவம் கொண்டு
தாயானைகிணங்க
தயங்கி தயங்கி
அருகில் வந்தால் - அந்த
அழகு பதுமை!!
தங்கத்தில்
தாலியிட்டேன்
"கவிஞன் ஆகிவிட்டாய்!!! "
என என் நண்பன் கூறினான்.....
பாவம்!
அவன் அறியவில்லை
கவிதையை பார்த்து எழுதுவது
எளிது என்று.
கவிதைகளாய் அவள்.....
பெருக்கி கொண்டிருந்தேன் ..
பெருக்குமாருடன் ,
பெருவிரலும் சிறுவிரலும் சேர்ந்தே தேய ..
பெருக்கி கொண்டிருந்தேன் ..
பெரிய வீதியெல்லாம் ,
பெரியதாய் எண்ணாமல் ..
* * *
இரவு நேரத்தில் ,
தண்டவாள ஓரத்தில் ..
உபயோகித்து ,
உரித்து எறியப்பட்ட ..
இலவச ஆணுறைகளை ,
பெருக்கி கொண்டிருந்தேன் ..
கைகளில் ,
உறை ஏதும் இல்லாமல் ..
* * *
மதுபான கூடம் எதிரே ..
மது ஒழிப்பு போராட்டம் ,
நடந்து முடிந்த இடத்தில் ..
அச்சிடப்பட்ட பிரச்சார தாள்களையும் ..
பிரச்சார மேடையின் பின் ,
குவிந்து கிடந்த ..
மது குடுவைகளையும் - சேர்த்தே
பெருக்கி கொண்டிருந்தேன் ..
* * *
கைப்பிடித்த கணவன் ,
நீ சிகரெட்டை புகைக்கும் போதும்
இயற்கை சீற்றம் கொள்ளும்போதும்
நான் உன்னை தான் உற்றுபார்க்கிறேன் !!
உன் நிழலை சுற்றி இருக்கும் வெற்றிடம்
என்னை தான் குறிக்கும்
அதை நீ அறியாய், அனால் நான் உன்னை அறிவேன்...!!
நீயோ என்னை எப்போதும் மறந்துவிடுகிறாய்
நானோ எப்பொழுதும் உன்னை கண்காணிக்கிறேன்
ஏனெனில் நானே இவ்வுலகில் நிரந்தரமானவன்...!!
என்னை கடவுளென்று நினைத்தாயோ??
இல்லை என் பெயர் மரணம்!!!
என் இமைகளில் என்றும் நீ ....
இமைக்கும் பொழுது எல்லாம்
உன்னை சிதறி விட அல்ல....
உறங்கும் போது கூட
நீ என் விழிகளிலே இருந்து விட....
உன் நினைவுகள் வலியது
அதனால் தான் என்னவோ
உன் நினைவில்லா உறக்கம்
இன்று வரை சாத்தியம் ஆகவில்லை ......
மூடியபடி எப்பொழுதும் என் விழிகள்
ஏனெனில்
இமைக்கும் பொழுது
நீ சிதறி விடாமல் இருக்க .....
நான் செய்த தவறெல்லாம்
உன் சிரிப்பை ரசித்தது.....
நான் செய்த தவறெல்லாம்
உன் பார்வையில் விழுந்தது....
நான் செய்த தவறெல்லாம்
உன்னோடு மணி கணக்கில் பேசியது...
நான் செய்த தவறெல்லாம்
இதன் பெயர் காதல் என்று அறியாமல் போனது....
நான் செய்த தவறெல்லாம்
என்னை நான் மறந்தது....
இன்றும்
நான் செய்யும் தவறெல்லாம்
உன் நினைவுகளை எனக்குளே வைத்திருப்பது ....
ஒரு முட்டாளாக...
ரா. சூர்யா
காதல் என்றால் என்ன ..................?
அறிந்தவர் தெரிந்தவர் யாரும் இருப்பின்
அறியாத எனக்கு விடைகொடுங்கள் நண்பர்களே ............
காதலுக்கு பின் தயங்கும் நட்பு...
நட்பால் காதலை தொடர்வது எளிது....
கடினம்...
உன் காதலை மறந்து அதை
நட்பாய் தொடர்வது....
காதலை மறந்து
நட்புடன் உன்னிடம் சிரிப்பதும்...
நட்புடன் கை குலுக்குவதும்....
நட்புடன் நான் உன்னருகில் அமர்வதும்...
நட்புடன் உன்னுடன் ஒரு மணி நேர அரட்டையும்...
தொலைபேசியின் மறுமுனையில்
நட்புடன் தலை ஆட்டுவதும்...
நட்புடன் நீ என் தோழியுடன்
பழகுவதை ஏற்று கொள்வதும்...
நட்புடன் உணவை உன்னுடன் பகிர்வதும்..
உன் பின்னால் வண்டியில் அமர்ந்து நட்புடன்
வலம் வருவதும்....
கடினம்....
உன் காதல் மறந்து இந்நட்பு
வளர்வது கடினம்......
இன்று அல்ல என்றும் நட்பின் ஈடு காத
உன்னை நினைத்த அந்த நொடிகள்
மிகவும் வலியது....
ஏனெனில்...
அந்த நொடிகளில்..
என்னை மறந்து...
எனது வேலை மறந்து...
ஞாபகம் இல்லாமல்...
உன் நினைவில் மூழ்கி...
உன் இரு விழிகளின் இமைப்பில்...
உன் உதட்டினோற சிரிப்பில்...
உன் நெற்றியில் ஒரு முடி அசைவில்...
நீ மட்டும் என் நினைவில்....