இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”
கோடி கோடி ஆசைவிதை அலங்காரத்துடன்
பூமியில் குதித்து கொண்டதடா காதல் - அன்பே.!
காணும் மனமெல்லாம் காதல் மானம் பொழிய
மும்மூர்த்திகளால் வரம் பெற்று நிற்கிறது காதல் ஜோதி.!
பாரடா பாரினில் ஈன்ற தாய் சேய்யிலும்
முதுவேனிலும் இலையும் மலருமாய் மணக்கும்
ஒரு குர்ரான்,, ஒரு பைபிள்,, ஒரு மகாபாரதம்,,
காதல்... காதல்... காதல்... காதல்.. - நீங்கதே.!!
நம் ஜோடி நெஞ்சுக்குள் வர்ணம் தீட்டி
வர்ணத்தில் காதல் தெப்பமாய் உயிரை ஊற்றி
நம் மார்பில் கை வைத்து - அன்பே ..!
காதல் விளைச்சல் ஆவோம் - அருவியென.!
அறியாமல் பொய் சாய்ந்த காதல் மழை
அறிந்தே அறையும் காதல் வலி
உயிர் வாழா,, காதல் வாழ,, - பெற்றோரே..!
ஒரு ஓசை ஆகிறது - விட்டுடாத என்னை..!!
இலை உதிர்ந்தாலும் - சினம்
வேர் மடியாமல் மீண்டும் காதலித்து - தவமாய்
தூறல் நின்று மழை பாசம் பொழிந்திட-அதே இலை.!
முக்கண் இலையாய் பிறப்போம் - பதியென..!!
அன்பே மூச்சிறைத்து ஓடும் முக்கூடல் நதியோரத்தில்
சாதி, மத, பேதம்,முகூர்த்த நெருப்பில் மூட்டி
மூன்று முடிச்சில் இலை,பூக்கள் முந்தானை சுற்ற
கால் பிணைந்து காதல் ஜென்மத்தை காப்போம் - கண்ணே ...!!!
------------------------------ *** ------------------------------ *** -----------------------------------
முழு உரிமையாளர் :
பெயர் : சக்திவேல்
வயது : இருபத்தைந்து
இருப்பிடம் : தர்மபுரி
மாநிலம் : தமிழ்நாடு
((( இதயங்களே காதல் ஒரு அழகான ஜென்மம் அதனாலே காதல் இல்லையேல் சாவது சாத்தியமாகிறது, ஜென்மம் விழி கொள்கிறது )))