இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதைப்போட்டி- 2015”
ஏழையாய் இருப்பதற்கு
ஏன் வருத்தப்படுகிறாய்....?
மேகத்தை பிழிந்தெடுத்து
முகத்தை நீ கழுவிக்கொள்
முழுநிலவை பொடிசெய்து
முகப்பூச்சு போட்டுக்கொள்
வானவில்லை தொட்டெடுத்து
வண்ணப் பொட்டு வைத்துக்கொள்
விண்மீன்கள் தேர்ந்தெடுத்து
காதில் மூக்கில் அணிந்துக்கொள்
இப்போது பார்...
நீ பிரபஞ்சப்பேரழகி
சரி..
செல்பேசி தான்
காதல் வளர்க்கும் சாதனமா ?
மின்னஞ்சல் அனுப்பினால்தான்
காதல் வளர்ச்சி சாத்தியமா ?
குறுஞ்செய்தி பகிர்ந்தால்தான்
நம் காதல் வளருமா ?
முகநூல் கணக்கின்றி
கொண்ட காதல் தளருமா?
நாம் ஏழை ...
நமக்கெதற்கு இதெல்லாம்?
வா..
இப்படியே காதலிப்போம் !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது என் சொந்த படைப்பு என்று உறுதிகூறுகிறேன்
பெயர் – புதுவைப்பிரபா
வயது – 41
ஊர் – புதுச்சேரி
நாடு - இந்தியா
அழைப்பிலக்கம் – 9443214654