Sakthivel - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sakthivel |
இடம் | : Dharmapuri |
பிறந்த தேதி | : 01-Aug-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-May-2012 |
பார்த்தவர்கள் | : 277 |
புள்ளி | : 72 |
வாழும்போதே மனிதனாய் வாழ்ந்துவிடு ...
தமிழ் என்றால் முறுக்கேற
தாயை வணங்கி
தந்தையை மதித்து
தாரத்தை தட்டிக்கொடுத்து
தமையனுக்கு தோல் கொடுத்து
தன் அக்காள் மகள்களை சீண்டி
தங்கை மகனுக்கு எண்ணெய் பூசி
தான் மட்டும் என்ற உணர்வை மறந்து
தாழ்ந்தோர் யாருமில்லை - சமம் என்ற சொல்லே
தரணி எங்கும் ஓங்கி
தமிழ்போல் தமிழே முழக்கமிட
தமிழ் திருநாளை கொண்டாடுவோம்
தம்மை காக்கும் விவசாயியை மதித்து.
தாலாட்டு பாட தரணிக்கு வந்தவர்!தாளத்தோடு தரை தொடுமெல்லாம்,பாடும் குரலால் நனைத்தவர்,வீசும் காற்றையும் காந்த குரலால் எழிலூட்டியவர்!மனமெல்லாம் மகுடம் சூடிய வண்ண குரலே!என் வார்த்தைகளும் அழுகிறது இன்று.பல மொழி வார்த்தைகள் எல்லாம்,உன் குரலால் அழகானது.மீண்டெழ முடியாத இடத்தில் இருந்தாலும்,உங்கள் குரல் நாங்கள் உடையும் நேரத்தில் மீட்கும்.ஆனால், உம்மை மீட்க நாங்கள் எங்கு செல்வோம்?கலியுகம் விட்டு விண்ணுலகம் போனவரே!அங்கும் உம்மை வரவேற்க உம் குரலே ஒலிக்கும்.இறைவா ! சொர்க வாசலை திறந்து வை !அவரின் குரலை இனி நீ மட்டுமே கேட்க .மனமுடைந்த கண்ணீர் மட்டுமே !வார்த்தை தடுமாறுகிறது தடம் மாறி போனதால் .வாழ்க வாழும் உன் ப
கிறுக்கல்களை நினைத்து ரசித்தபடி .
நண்பர்களின் சேட்டைகளை நினைத்தேன்.
சிரித்தபடி சொன்னேன் .
மாற்றம் கொண்ட வாழ்வில்.
பல கிறுக்கன்கள் ஒன்று சேர்ந்து .
பல கதைகள் பேசிவிட்டு.
பல மணி நேரம் கழித்துவிட்டு.
பார்த்து போ மச்ச என்று சொல்லிவிட்டு.
பல வருடங்கள் கழிந்த நிலையில்.
எப்போ பார்க்கலாம் மச்ச என்பான் பாரு.
கல்லூரிக்குள் மறுபடியும் நுழைவது போல்.
அப்டியே கண்ணில் பீர் பாட்டில் தெரியும்.
அரவணைத்து குடித்துவிட்டு சொல்வான் .
மச்ச நீ சூப்பர் , நீயும் சூப்பர் டா என்று.
நண்பா , நண்பர்கள் மாறலாம்.
ஆனால்,நண்பர்களின் உணர்வுகள் மாறுவதில்லை.
ஊற்றுவதும் , தேற்றுவதும் , கடைசியில் அரவணைப்பதும்.
நட்
சின்ன பொண்ணு சொக்கிய பேச்சே,,
சிதறும் இதழ் பேச்சால்
சிந்தனை துளிரும் அலைகடல் மீறுதடி - ஆஹா..!
சிறுஉடல் விட்டு
சிதறும் சேலை வனப்பில்
சிறுவானவில்லும் ஒட்டிகொண்டதடி - இம்ம்ம்..!
சிலமுகம் சுழித்த
சின மொழி ஆசை முறைபால்
சித்தம் கலைந்ததடி - பூவே..!
சிலிர்க்க நனைத்து
சிறைப்பட்டு பிணைந்த நம் உதட்டால்
சிறு எச்சிலும் தத்தளிக்குதடி - முத்தே..!
சிறுவளையல் பரிசால்
சிறு மொட்டாய் வெடித்தால்
சிறுஜென்மமும் விழிக்கொண்டதடி - வாழ்வே..!
சிறுதுயரம் வழிவிட்டு
சிலையாகும் உன் மௌனத்தால்
சில யுகங்கள் தொலைந்தே போனதடி - மௌனமே..!
சிலு சிலு நம் காதலால்
சிறு புண்ணியமும் யாசிக்கட்டும்
சில்லென்ற
பூவுலகம் தூங்கும் பௌர்ணமி நேரம்.,
முத்தான வெண்ணிலா புறா ஒன்று.,
நீல வானிலே சிறகடித்தது.,
அதை முழு பௌர்ணமி நதி ஒன்று,!
காதலிப்பதாய் மனதை விரித்தது.,
சலனமான நதியின் நட்ட நடு இதயத்தில்
வெண்ணிலா புறா சிறகடித்து நிற்கிறது.
முழு நிலவும் தன் பொழிவை இறைத்தது
இரு மௌன இயற்கை அழகுகள்
காதலித்த தருணம் , மௌனித்த தருணம்
சிங்கார மீன் துள்ளி பாய்ந்து நீரை கலைத்தது
புறாவும் புன்னகையுடன் புறப்பட்ட நேரம்
நதி தன் வட்ட வட்ட அலைகளை எழுப்பி
படம் பிடித்து தன் காதலை சொன்னது
என் உயிரிலும் உடலிலும் நிறைந்திருப்பவள் நீதான்..
எழில் இறகே..!! இணைந்திடு என்னுள்..
பூவுலகம் தூங்கும் பௌர்ணமி நேரம்.,
முத்தான வெண்ணிலா புறா ஒன்று.,
நீல வானிலே சிறகடித்தது.,
அதை முழு பௌர்ணமி நதி ஒன்று,!
காதலிப்பதாய் மனதை விரித்தது.,
சலனமான நதியின் நட்ட நடு இதயத்தில்
வெண்ணிலா புறா சிறகடித்து நிற்கிறது.
முழு நிலவும் தன் பொழிவை இறைத்தது
இரு மௌன இயற்கை அழகுகள்
காதலித்த தருணம் , மௌனித்த தருணம்
சிங்கார மீன் துள்ளி பாய்ந்து நீரை கலைத்தது
புறாவும் புன்னகையுடன் புறப்பட்ட நேரம்
நதி தன் வட்ட வட்ட அலைகளை எழுப்பி
படம் பிடித்து தன் காதலை சொன்னது
என் உயிரிலும் உடலிலும் நிறைந்திருப்பவள் நீதான்..
எழில் இறகே..!! இணைந்திடு என்னுள்..
காலம் கடந்தாலும் சரி
'கலாம்' கடந்தாலும் சரி
கனவுகளும் கடந்தாலும் சரி
அவர் காலம் கடக்காமல்
காலத்தை கையில் அடக்க
கற்று கொடுத்த கனவெனும் எதிர்காலம்
கனவல்ல - 'விதை'
அது இன்று மண்ணில் விதைக்கப்பட்டது
அது மீண்டும் சான்த்தமுடன் ஜென்மிக்க
கண்ணீருடன் வேண்டுகிறோம் - "இறைவா".!!!
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
என் இருள் சொர்க்கத்தில்
மீண்டும் மீண்டும் தூங்க ஆசை
ஏனென்றால் - இதயங்களே..!!
எனக்காக தாய் கட்டிய முதல் கோவில் - 'கருவறை'
எனக்காக தாய் மீட்டிய முதல் இசை - 'அவளின் இதயத்துடிப்பு'
எனக்காக அவள் செய்த குளிர் வெப்ப மழை - 'அவள் குடித்த நீர்'
நான் நுகர்ந்த முதல் மலர் வாசனை - 'அவள் சுவாசம்'
சுத்தம் கொண்டு யுத்தம் செய்து காத்த - 'பெண் ஹிட்லர்'
என் மேல் பூக்களை இறைத்த இளவரசி - 'அவள் புன்னகை'
குளிரிலும் சூரியனை கருவறைக்குள் உருவாக்கிய - 'போர்வைக்குள் அவள்'
என்னென்று சொல்ல - இதயங்களே..!!
மண்ணில் என் கால் பதியும் வரை
கடவுளிடம் கதறும் காட்சிக்கு
கல்லும் உயிர் பெற்று கை கூப்பும்
மாதவனும் (கிருஷ்
கோடி கோடி ஆசைவிதை அலங்காரத்துடன்
பூமியில் குதித்து கொண்டதடா காதல் - அன்பே.!
காணும் மனமெல்லாம் காதல் மானம் பொழிய
மும்மூர்த்திகளால் வரம் பெற்று நிற்கிறது காதல் ஜோதி.!
பாரடா பாரினில் ஈன்ற தாய் சேய்யிலும்
முதுவேனிலும் இலையும் மலருமாய் மணக்கும்
ஒரு குர்ரான்,, ஒரு பைபிள்,, ஒரு மகாபாரதம்,,
காதல்... காதல்... காதல்... காதல்.. - நீங்கதே.!!
நம் ஜோடி நெஞ்சுக்குள் வர்ணம் தீட்டி
வர்ணத்தில் காதல் தெப்பமாய் உயிரை ஊற்றி
நம் மார்பில் கை வைத்து - அன்பே ..!
காதல் விளைச்சல் ஆவோம் - அருவியென.!
அறியாமல் பொய் சாய்ந்த காதல் மழை
அறிந்தே அறையும் காதல் வலி
உயிர் வாழா,, காதல் வாழ,, - பெற்றோரே..!
ஒரு
இயற்கையானது காதல்..!
காதல் என்பது ஒரு துடிப்பு
அதை கொன்று கிழித்தாலும்
அன்பு மட்டுமே தென்படும்
சந்தேகம் இல்லா காதலர் இல்லை
சண்டை இல்லா காதலும் இல்லை
காதலுக்கென்று தனி உலகம் இல்லை
ஏனெனில் ஒவ்வொரு இதயமும் காதலின் உலகமே
காதலுக்கு ஆறுதலும் ஆதரவும்,,,
காதலர்களால் மட்டுமே சாத்தியம்.
காதலுக்கு காதலே சண்டை போடுவது
காதலர்களின் உலகத்தில் மட்டுமே..என் உயிர்களே.!
சண்டை என்ற கோவத்தால் காதலை இழந்து விடாதிர்
காதலின் இதயங்களே - வலி விதி கொள்ளும்.!!