இராபர்ட் அருண் ஜேம்ஸ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இராபர்ட் அருண் ஜேம்ஸ்
இடம்:  நியூ ஜெர்சி | காரைக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jul-2015
பார்த்தவர்கள்:  340
புள்ளி:  21

என்னைப் பற்றி...

கவிதைகளின் ரசிகன் !!!

என் படைப்புகள்
இராபர்ட் அருண் ஜேம்ஸ் செய்திகள்

...........................................................................................................................................................................................

வானம் அளந்தது
வாமனன் மட்டுமல்ல
கல்பனா சாவ்லாவும்..
..........................................................................................................

முதியோர் இல்லத்தில்
பேரனிடம் வேண்டினாள் பாட்டி:
“ அப்பா அம்மாவை நல்லா கவனிச்சுக்கோ..”
.................................................................................................................

கணவர் வராமல் சாப்பிட மாட்டார்
இக்காலத

மேலும்

மிக்க நன்றி தோழமையே. 26-Jun-2016 10:50 am
அருமை 16-Jun-2016 11:54 pm
நன்றி நண்பரே. 02-May-2016 4:44 pm
//மறு ஒளிபரப்பாகிறது மனைவியின் குழந்தைப் பருவம்.. மடியில் மகள்..! // நல்ல சிந்தனை .. வாழ்த்துக்கள் 02-May-2016 4:09 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2016 11:52 am

இன்பம்
=======

உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில்
ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே!

ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில்
பாஷைகள் புரியாத பைத்திய வேதமே!

கனவில் மிதக்கும் காதற் படகில்
அனலை அடிக்கும் அலையின் மோகமே!

நினைவில் நின்று நெஞ்சைத் துளைத்து
கனவில் இனிக்கும் குயிலின் ராகமே!

நதிகள் இசைக்கும் தண்ணீர் கீதமே
பதில் பேசாத உணர்ச்சியின் மீதமே!

குழந்தை இதழில் ஒளிந்து கொண்டு
அழுது கொள்ளும் அழகின் சிரிப்பே!

மெழுகின் உடலில் மறைந்து கொண்டு
ஒழுகிச் செல்லும் ஒளியின் விரிப்பே!

கட்டில் ரகசியம் கேட்டுக் கேட்டே
மொட்டு அவிழ்த்த தசைமலர்ப் பாட்டே!

பத்து மாதம்

மேலும்

நல்ல வார்த்தைக் கோர்வை ... வாழ்த்துக்கள் ஜின்னா - தாங்கள் புத்தகம் வெளியிட்டுள்ளீர்கள் என அறிகிறேன். புத்தகத்தின் பெயர் என்ன? எங்கு கிடைக்கும் எனச் சொல்லுங்களேன் 02-May-2016 3:53 am
மிக்க நன்றி... ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல... வளர்வோம் வளர்ப்போம்... 21-Apr-2016 12:38 am
அருமையான நடை நண்பர் ஜின்னா அவர்களே. சொல்லாக்கமும் கருத்தும் அருமை. கணிமழைச் சாரலில் - கணி , இங்கு எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கனி, கணியாக அச்சேறிவிட்டதா என்பதைத் தெரிவிக்கவும். 05-Apr-2016 7:29 pm
மிக்க நன்றி... ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல... வளர்வோம் வளர்ப்போம்... 01-Apr-2016 11:44 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Dec-2015 1:07 am

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா எ

மேலும்

மிக அழகு.. 18-Feb-2017 11:10 pm
//கூட்டி அள்ளுவதற்குள் கரைந்து விட்டது கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு.. 'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும் கரையாமல் இருக்குமா என்ன? // நீங்கள் உயர்ந்த ஒரு கவி என்பதற்கு இவ்வரிகளே சான்று... 02-May-2016 3:40 am
மிக்க நன்றி தங்கள் ரசனைக்கு... 24-Dec-2015 3:07 am
மிகவும் ரசித்தேன் 22-Dec-2015 10:44 pm
இராபர்ட் அருண் ஜேம்ஸ் - இராபர்ட் அருண் ஜேம்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2015 11:51 am

(வெள்ளம் சொன்ன பாடத்திலிருந்து ...)

ஊழல் செய்தவர்களும்
ஊர்க் காசைத் தின்றவர்களும்
என்ன செய்திருப்பார்கள்?
ஒரு வேளை இன்பச் சுற்றுலா சென்றிருக்கலாம் அல்லது
மொட்டைமாடிகளில் ஒளிந்து அறைவாசம் செய்திருக்கலாம்.

உனது நிலை தான் என்ன?
சற்று சிந்தனை செய்து பார்த்தாயா?

உனது நடிகனின் படத்துக்கு
குடம் குடமாய் பாலாபிஷேகம் செய்தாயே!
உன் குழந்தைக்கு ஊட்ட ஒரு குவளைப் பால் கிடைத்ததா?

வாழ்க வாழ்க என்று வாய் வலிக்கக் கத்தினாயே!
எந்த அரசியல் தலைவன் உனக்கு
இன்று வாழ்க்கை கொடுத்துவிட்டான்?

என் மதம் என் மதம் என்று மார்தட்டிக் கொண்டாயே!
அவன் மதமும் அவள் மதமும் அல்லவா
உனக்கு இதமும் இ

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றிகள் நாகராணி! ஆம். இன்னும் எத்தனையோ கேவலங்கள் அரங்கேறியுள்ளன. என்னவென்று சொல்வது.. 27-Dec-2015 12:12 pm
தங்கள் கருத்துக்கு நன்றிகள் சர்பான் !! 27-Dec-2015 12:09 pm
அருமைங்க.. டாஸ்மாக்கை சொல்லாம விட்டுட்டீங்களே? நிவாரணப் பொருட்களை விற்றுக் குடித்த கேவலம் இங்கு தான் நடந்தது.. 27-Dec-2015 12:05 pm
உணர்ந்தால் நலமே!! 27-Dec-2015 11:55 am
இராபர்ட் அருண் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2015 11:51 am

(வெள்ளம் சொன்ன பாடத்திலிருந்து ...)

ஊழல் செய்தவர்களும்
ஊர்க் காசைத் தின்றவர்களும்
என்ன செய்திருப்பார்கள்?
ஒரு வேளை இன்பச் சுற்றுலா சென்றிருக்கலாம் அல்லது
மொட்டைமாடிகளில் ஒளிந்து அறைவாசம் செய்திருக்கலாம்.

உனது நிலை தான் என்ன?
சற்று சிந்தனை செய்து பார்த்தாயா?

உனது நடிகனின் படத்துக்கு
குடம் குடமாய் பாலாபிஷேகம் செய்தாயே!
உன் குழந்தைக்கு ஊட்ட ஒரு குவளைப் பால் கிடைத்ததா?

வாழ்க வாழ்க என்று வாய் வலிக்கக் கத்தினாயே!
எந்த அரசியல் தலைவன் உனக்கு
இன்று வாழ்க்கை கொடுத்துவிட்டான்?

என் மதம் என் மதம் என்று மார்தட்டிக் கொண்டாயே!
அவன் மதமும் அவள் மதமும் அல்லவா
உனக்கு இதமும் இ

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றிகள் நாகராணி! ஆம். இன்னும் எத்தனையோ கேவலங்கள் அரங்கேறியுள்ளன. என்னவென்று சொல்வது.. 27-Dec-2015 12:12 pm
தங்கள் கருத்துக்கு நன்றிகள் சர்பான் !! 27-Dec-2015 12:09 pm
அருமைங்க.. டாஸ்மாக்கை சொல்லாம விட்டுட்டீங்களே? நிவாரணப் பொருட்களை விற்றுக் குடித்த கேவலம் இங்கு தான் நடந்தது.. 27-Dec-2015 12:05 pm
உணர்ந்தால் நலமே!! 27-Dec-2015 11:55 am
இராபர்ட் அருண் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2015 9:08 am

வாழையடி வாழையாய்
வாழ்வாங்கு வாழ வேண்டி
வாயார வாழ்த்துகின்றன
வாசலிலே கட்டப்பட்ட
வாழ்விழந்த வாழை மரங்கள் !

பாவம் அவை !
நீங்களே சொல்லுங்கள் !

வாழைத் தாரை சுமந்து நிற்கும்
இந்த கர்ப்பிணி மரங்களின்
கால்களை வெட்டித்தான்
இப்படி கட்டிப் போடலாமா ?


நேற்று வரை,
செடித்தாய் மடி அமர்ந்து
புன்னகை வீசிய பச்சிளம் பூக்கள்
இன்று,
பலவந்தமாய்ப் பறிக்கப்பட்டு
கால்கள் பிணைக்கப்பட்டு
மாலையாய்த் திரிக்கப்பட்டு
தூக்கில் அல்லவா தொங்குகின்றன
மணமக்களின் தோள்கள் மேல் !


நேற்று வரை,
குதூகலத்தோடு கூவிச் சிரித்த
கொக்கரக்கோ கோழிகளும்
அம்மே! என்று தமிழ் பரப்பிய
அப்பாவி ஆட

மேலும்

நன்றிகள் பல தோழரே ! 06-Aug-2015 1:03 am
நல்ல படைப்பு நண்பரே!! வரிகளும் சிந்தையும் புதுமை 06-Aug-2015 1:01 am
அன்புத் தோழர் பார்த்திபரே ! தொடர் ஊக்கத்திற்கு நன்றிகள் பல. 19-Jul-2015 7:50 pm
ஆகா! அற்புதம் ஐயா ! தங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் உத்துவேகமுமே என்னைப் போன்றவர்களுக்கு இயக்கு சக்தி. மிகவும் மகிழ்ந்து போனேன். தங்களின் ஆசிக்கு என்னுடைய கோடி நன்றிகள். 19-Jul-2015 7:46 pm
இராபர்ட் அருண் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2015 6:36 pm

குறிப்பு : தகவல் தொழில்நுட்பத்தின் தலைமகன்களுக்கு சமர்ப்பணம் !

ஒரு நொடியும் உன்னை விட்டுப் பிரியேன் !
இரவும், பகலும் உன்னையே நினைத்து
உயிர் வாழ்கிறேன் என்று
காதல் மொழி பேசுகிறான்
நம் கதாநாயகன்,
கன்னிப் பொறியைப் பார்த்து அல்ல !
கணிப்பொறியைப் பார்த்து !!!

ஆம்,
கன்னியைப் பார்த்துக்
காதல் செய்ய வேண்டியவர்கள்
இங்கே,
கணினியை அல்லவா
கட்டிப்பிடித்துக் கிடக்கிறார்கள் !

அன்று,
மடியில் கன்னியை சாய்த்து
மணிக்கணக்காய் கதை பேசியவர்கள்
இன்று,
மடிக்கணினியை மடியில் வைத்து
மணிக்கணக்காய்ப் புலம்பித் திரிகிறார்களே!

பாவம் இவர்கள் !

இலட்சங்களில் சம்பளம் பெறுவதால்
பலருக்கு இ

மேலும்

தங்களின் ஊக்கத்திற்கு என் மேலான நன்றிகள் தோழரே ! 06-Aug-2015 1:05 am
நிதர்சன வரிகள் நல்ல கவிதை வரிகள் இது போல இன்னும் எழுதுங்கள் அதிகம் அதிகமாய் வாழ்த்துக்கள் 06-Aug-2015 1:02 am
தங்களின் ஊக்கத்திற்கு என் மேலான நன்றிகள் தோழரே ! 16-Jul-2015 11:55 pm
அக்காவின் திருமணம் தங்கையின் மேல்படிப்பு சர்க்கரையாய்ப் பேசும் பெற்றோருக்குச் சர்க்கரை வியாதி ! என்று காரணங்கள் அதிகமாக காந்தித் தாத்தாக்களும் அதிகமாய்த் தேவைப்படுவதால் தகவல் தொழில்நுட்பமே வழி எனும் தவறான தீர்ப்புகள் தரப்படுகின்றன ! அப்பப்பா அருமை... மறுக்க முடியாத உண்மை .எழுதியதை படித்தால் நீங்களும் ஐடி துறை போல இருக்கே ...சரிதானா??? 16-Jul-2015 10:47 am
இராபர்ட் அருண் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2015 8:05 am

கோடிப் பெண்களில் உன்னைத்
தேடிப் பிடித்து வந்தேன்
கோமகளைப் போற்றிப் பாடி
கடிதம் ஒன்றைத் தந்தேன் !

கடிதம் வாங்கிக் கொண்டு - ஏன்
கடுகுப் பார்வை பார்த்தாய் ?
உன் அழகால் மிரட்டித் தானே
எனை இங்கு வந்து சேர்த்தாய் !

பிரித்துப் பார்த்தாய் கடிதத்தை
எழுதி வைத்தேன் இதயத்தை !
முழுதாய்ப் படித்து முடிக்கும்போது -உன்
முகத்தில் கண்டேன் உதயத்தை!

விழிகள் திறந்து நோக்கினாய் !
வில்லம்பால் என்னைத் தாக்கினாய் !
விரல்களால் என்னைத் தொட்டு
விரவும் உயிரைப் போக்கினாய் !

என் அழகே ! என் உலகே !
கடிதம் படித்தது போதும் - என்
இதயம் துடிப்பதைக் கேள் !

புல்லைப் போன்ற புருவம் - இது
பிரம்மன

மேலும்

நன்றி தோழரே தங்கள் ஊக்கத்திற்கு !! தொடர்ந்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 17-Jul-2015 8:02 pm
தேவதையை பிடித்ததுபோல் வார்த்தைகளையும் தேடி பிடித்துள்ளீர் நன்று 17-Jul-2015 7:25 pm
நன்றி கவியரசு அவர்களே ! 16-Jul-2015 11:53 pm
ஆரம்பமே அசத்தலாக உள்ளதே ...அருமை அருமை ... 16-Jul-2015 10:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
user photo

KAVIYARASU K

ERODE

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே