S.ஜெயராம் குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : S.ஜெயராம் குமார் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 17-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 668 |
புள்ளி | : 183 |
அறிவற்ற ஞானி
காதல் !
ஆசையற்ற குமரி
காதல்!
இலக்கணமற்ற மொழி
காதல் !
ஈதை அற்ற வலி
காதல் !
உவமையற்ற கவிதை
காதல் !
ஊனம் அற்ற ஊனம
காதல் !
எடையற்ற இமயம்
காதல் !
ஏடுடற்ற கல்வி
காதல் !
ஐயமற்ற கோழை
காதல் !
ஒளியற்ற காலை
காதல் !
ஓய்வற்ற சோம்பல்
காதல் !
ஔடதமற்ற பிணி
காதல் !
அஃதே காதலில்
முரணும் அழகே !
©s.jai
அவள் கவிதைகளில்
எனக்கென்று ஒரு இடம்
கொடுத்தாள் !
"முற்றுபுள்ளியாய் இருப்பதற்கு "
அவள் கவிதைகளில்
எனக்கென்று ஒரு இடம்
கொடுத்தாள் !
"முற்றுபுள்ளியாய் இருப்பதற்கு "
பரிணாம வளர்ச்சியில்
'வால்' இழந்தது
மனித இனம் மட்டுமல்ல !
'இயந்திரமும்' தான் !
#கம்பியிலி இயந்திரம்
( Wireless Machine)#
இயந்திரத்தை மனிதனாக்கும் முயற்சியில் !
தன்னை அறியாமலேயே இயந்திரமாய்
மாறிக் கொண்டிருக்கிறது மனித இனம் !
என் விரலோடு ,உன் விரல் கோர்த்து இருக்கி பிடிப்பாய்...!
என் இதழோடு ,உன் இதழ் பதித்து மெல்ல பருகுவாய்...!
இவ்வாறு தினமும்
சோம்பல் முறித்து
புத்துயிர் பெற்று விடிவது
உன் காலை மட்டும் அல்ல...!
இந்த கோப்பையின் காலையும் தான்...!
~~குளம்பி(காப்பி) கோப்பையின் காலை வணக்கம்~~
கைக்கோர்த்து நடக்கும்
தருணங்கள் நிச்சயம்
இருமனத்திலும் சகோதர
தன்மை உணரப்படும்
நட்புக்கு நல்வழிப்பாதை
நிச்சயம் காட்டும் ...
உணர்வுகள் நிச்சயம்
புரிந்துக்கொள்ளப்படும் .....
நன்மை தீமைகள்
என்னவென்று உணரவைக்கும்
ஆயிரம் உறவுகள்
ஆயிரம் குற்றம் சொன்னாலும்
தவறான எண்ணங்கள்
ஒருபோதும் நெஞ்சில்
இல்லாத உறவுகள் .....
நட்பின் உறவுகள்
இணைத்திருந்தாலும்
பிரிந்தாலும் நட்பின்
சுகமான நினைவுகள் மாறாது .....
ஏமாற்றங்களை ஏமாற்றி விடலாம் என்று நம்மைய
ஏமாற்றிக் கொள்கிறோம்...!
எதிர்பாராமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற
எதிர்பார்போடு தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்...!
என் காதலை அழித்து விட்டாய் அடி என் கண்ணே..!
அந்த கடவுள் படைத்த பொய்கள் எல்லாம் பெண்ணே..!
உன் துப்பட்டாவில் என் காதலை தூக்கில் போட்டாயே..!
என்றும் என்னை கண்ணீர் கடலில் தவிக்க விட்டாயே..!
எரிமலை குழம்பினை இதயத்தில் ஊற்றினாய்..!
எமனின் முகவரி கண் முன்னே காட்டினாய்..!
வெண்ணிலா ஒளியினை ரசித்தது பாவமா..!
கண்களை இரவலாய் கேட்பது நியாயமா..!
என் காதல் என்ன காட்டில் பற்றிய தீயா..!
அதை பற்ற வைத்த தீப்பொறி பெண்ணே நீயா..!
ஏவாள் பெண் என உன்னை விரும்பினேன்..!
வௌவால் போல என் வாழ்கை தலைக்கீழாய் தொங்குதே..!
வீசும் புயலுக்கு புல்லின் வலி தான் தெரியுமா..!
நேசித்த என் இதயத்தை தீட்டால் கூட உன்
முகம் தெரியாது
அகம் மகிழும்
முகநூல்
@
முகம் பார்க்கும்
முகம் பேசும்
ஸ்கைப்
@
கடுகுசிறிது
காரம் பெரிது
டியிற்றல்
@
மனிதன்
உணர்ச்சியில்லை
ரோபோ
@
நவீனகளஞ்சியம்
நவீன பொக்கிஷம்
கணணி
நம்மை நேசிப்பவர்கள்
நம்மிடம் இருந்து வெரும் பரிசுகளை
எதிர்பார்பது இல்லை..!
இன்னும் அதிகமான பாசத்தை தான்
எதிர்பார்கிறார்கள்..!
தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.
பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.
அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.
காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.
புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.
தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.