புவனா முத்துக்கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  புவனா முத்துக்கிருஷ்ணன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  30-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Oct-2013
பார்த்தவர்கள்:  1038
புள்ளி:  149

என்னைப் பற்றி...

இப்போதைக்கு வேலை இல்லா பட்டதாரி

என் படைப்புகள்
புவனா முத்துக்கிருஷ்ணன் செய்திகள்
புவனா முத்துக்கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) S.ஜெயராம் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Nov-2013 8:57 pm

தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.

மேலும்

தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி. எனக்கும் உயிர் உண்டு என் தோழி வடிவில். 03-Jan-2015 8:20 pm
அப்படி என்றால் அந்த மிக பெரிய வரம் பெற்றவள் நான் என்பேன் தோழரே... கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே 23-Apr-2014 3:55 pm
வரிகள் அனைத்தும் உண்மை..! ///தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி.//// என் தோழியின் நினைவு வருகிறது.! ////ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும், வாழ வழிகாட்டுவான் அவளுக்கு அவள் தோழன்/// ஒரு ஆண்/பெண் காதலனாக/ காதலியாக கிடைப்பதை விட,நல்ல தோழனாக/தோழியாக கிடைத்தால் அது மிக பெரிய வரம்.! கவி மிக அருமை,வாழ்த்துக்கள் தோழி.! 23-Apr-2014 2:30 pm
நிச்சயம் படைக்கும் 31-Mar-2014 8:30 pm
C. SHANTHI அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Nov-2016 10:32 pm

#தந்தையின் தவிப்பு

ஊர்கூடி உறவு கூடி வாழ்த்தும் உரைத்து
ஓர் பிள்ளை உதிக்கவில்லை ஈரைந்தாண்டாய்
மலடி என்ற பட்டமுடன் மனமுடைந்தவளும்
சூள் கொண்டாள் ஒருநாளில் இறைவன் அருளால்..!

அங்கமது குலுக்காது கருவை சுமந்தே
கருவினிலும் கருத்தாக வளர்த்தாள் உயிராய்
விதைத்தவனும் விழி மலர கண்டே இரசித்தான்
மனைவியவள் நாளுந்தான் கூடுதல் அழகாய்..!

நிறைமாதம் கண்டவளோ கொண்டாள் வலியும்
மரணத்தின் வாயிலிலே நின்றாள் அவளும்
மனம் கலங்கி மணவாளன் நடையும் பயில - மனைவி
ஓலத்தால் துவண்டானே துயரால் அவனும்..!

என்னாகும் ஏதாகும் என்ற தவிப்பில்
படபடத்து நின்றவனும் பரவச மடைய
வீறிட்ட மழலை குரல் மணியோசையாய்

மேலும்

அருமை அருமை 19-Nov-2016 10:30 am
மிக்க நன்றி சர்பான்..! 19-Nov-2016 9:28 am
வாழ்க்கையில் உயர்ந்த செல்வம் குழந்தைகள் தான்..அவைகள் இறைவனின் நாட்டத்தால் வாழ்க்கையில் பரிசாகிறது. 19-Nov-2016 8:25 am

யாருக்கு குழந்தைகள் தினம்?
பிஞ்சிலே பழுத்தது என பேர்
எடுத்த பத்து வயது சிறுசுக்கா?
அறுபதிலும் கள்ளம் கபடம்
அற்று வாழும் பெருசுக்கா?

ஏன் கொண்டாட வேண்டும் குழந்தைகள் தினம்?
எதற்கு வேண்டும் குழந்தைத் தனம்?
நீயா? நானா? நிகழ்ச்சி அல்ல வாழ்க்கை
அறிவை அரங்கேற்றம் செய்து அகம் மகிழ
அஃது அது? இது? எது? போல் கலகலப்பானது

அதில் கடவுள் தான் தொகுப்பாளர்
அவர் தரும் குழந்தைத் தனம் தான் ஆயிரம் புள்ளிகள்
அவர் நடத்தும் ஆட்டத்தின் இறுதி வரை குழந்தைத் தனம்
மாறாமல் காப்பவனே வெற்றி பெற்றவன்

ஆம் அவனே வெற்றி பெற்றவன்(முக்தி பெற்றவன்)
தோற்றவர்கள் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படலாம்

மேலும்

பழனி குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Nov-2016 9:11 am

துள்ளிக் குதித்து வருத்தமறியாது
பள்ளிச் சென்ற பால்யப்பருவமது
வந்திடுமோ வாழ்வில் நமக்கும் ?

இளவட்டங்கள் அணியாக இணைந்து
இன்பமுடன் சுற்றித்திரிந்த நேரங்கள்
இனியும் திரும்பிடுமா அக்காலம் ?

பெற்றவரைப் பிள்ளைகள் துதித்ததும்
நேயமுள்ள நெஞ்சங்களை மதித்ததும்
காண்போமா இனிவரும் காலத்தில் ?

பண்பாடும் அறநெறிகளும் தவறாது
வழிமுறையாய் வாழ்வில் இருந்தது
வந்திடுமா மீண்டும் உள்ளத்தில் ?

சூதுவாதும் பழியுணர்வும் அறியாத
காழ்ப்புணர்வு அரசியலும் தெரியாத
சூழ்நிலை நிலவியதும் திரும்புமா ?

மும்மாரிப் பொழிந்திட்டு பூமியில்
முப்போகம் பயிரிட்டு மகிழ்ந்திட்ட
பொற்காலம் வந்திடுமா இனியும்

மேலும்

உண்மைதான் அண்னா ....துல்லியமான கருத்து. மிக்க நன்றி 03-Nov-2016 5:48 pm
இனியும் உலகை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஊடகங்கள் அனைத்துக்கும் கடுமையான தணிக்கை முறை தேவை. ஒழுக்கமானவர்கள் அரசியலுக்கு வந்து அறநெறி போற்றி ஆட்சிக்கு வரவேண்டும். மதங்களால் எந்தப் பயனும் இல்லை. மக்களை நல்வழிப்படுத்தாத மதங்களுக்கு இங்கு என்ன வேலையென்று தெரியவில்லை. கற்றவர்களும் கண்மூடித்தனமாக மூடப்பழக்கவழக்கங்கள் தழைத்தோங்க அறிவியலையும் பயன்படுத்தும் பண்பாடு, மொழி, நாகரிகம் ஒழுக்கும் எல்லாம் சீரழிந்து போவதை யாராலும் தடுக்கமுடியாது. ஒழுக்கத்தைப் போதிக்காத கல்வி இயந்திர வாழ்க்கை வாழ்ந்து பணம் சம்பாதிக்கமடாடுமே உதவும். 02-Nov-2016 5:20 pm
தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி 02-Nov-2016 3:10 pm
மிகவும் சரியே ...மிக்க நன்றி நண்பரே 02-Nov-2016 3:09 pm
சுடர்விழி ரா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 12:56 pm

மலரின் சாயலல்ல ,
மான்களின் துள்ளல்ல,
மௌனத்தின் சிகரமல்ல,
மனிதத்தில் சிறந்தவள் ..........

ஈன்றெடுத்த அன்னையல்ல ,
அனுதினமும் காண்பவளல்ல ,
அன்னையின் சாயலல்ல ,
அன்பின் மொழியானவள் ......

எச்சரிப்பில் என் தந்தையாய்,
எஞ்சியபொழுது என் தோழியாய்,
பாசத்தில் பாசங்கில்லாதவள் ,
நேசத்தில் குறைவில்லாதவள் .......
தோல்விகளைக்கண்டு துடிக்கும் பொழுது
தோள் கொடுக்காமல்
தன்னம்பிக்"கை" கொடுத்தவள் ......

என் சினம் உன்மேல் விழுந்தால்
"பாசத்துளிகள் " என்பாய்....
என் செருக்கு உன்மேல் விழுந்தால்
நம் நட்பின் "நெருக்கம் " என்பாய் ......

உன்பாசத்திற்கு,

வான்நிலவும் ஏங்குதடி ,
கடலலையும்

மேலும்

புரிதலில் மகிழ்ச்சி ... 19-Apr-2015 7:15 pm
படைப்பு....... அருமை.. 19-Apr-2015 7:09 pm
நன்றிகள் நட்பே ..... 31-Mar-2015 9:10 am
Kavi arumai thozhi. Vaalththukkal 31-Mar-2015 7:50 am
புவனா முத்துக்கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jul-2014 9:19 pm

முதலும் சார்பும் அழகாய்,
அழகழகாய் தரித்து
கவி புனைய அவா

உயிரும் மெய்யும் ஒரு
சேர விதவிதமாய்
கவி புனைய அவா

யாப்பும் வெண்பாவும்
கரம் குழைக்கும்
கவி புனைய அவா

மோனை முன்னிறுத்தி
எதுகை எட்டி பிடிக்க
கவி புனைய அவா

சீர்,சீராக செதுக்கி
அணி,அணி வகுக்க
கவி புனைய அவா

வினைத்தொகை விருந்தாக
வினைமுற்று அமுதாக
கவி புனைய அவா

அடுக்குத்தொடர் அழைக்கப்பட்டு
இடைநிலை இணைக்கப்பட்டு
கவி புனைய அவா

லுகரமும்,லிகரமும் வேண்டும்
வேண்டாம் இடம் நின்று
அளபெடை அளவாய் அரங்கேற
கவி புனைய அவா

அறிந்தோர் ஆராய,
இலக்கணம் பிரமிக்க,
படிப்போர் விழி அகல,
கேட்ப்போர் செவிகிற

மேலும்

அறிந்தோர் ஆராய, இலக்கணம்பிரமிக்க ,படிப்போர் விழி அகல , கேட்போர்செவி கிறங்க, விளங்கினார் உயிர் இனிக்க , அன்னைக்காய் என் தமிழ் அன்னைக்காய் கவி புனைய ,அருமைஅருமை புனைந்து விட்டீர் , வாழ்த்துக்கள் புவனா , 05-Nov-2016 5:48 pm
உங்கள் அவா நிறைவேற வாழ்த்துகிறேன்.. 04-Nov-2016 6:37 am
அற்புதமான அவா - கவி புவனவா உங்கள் அவா தொடரட்டும் தோழி 15-Jun-2015 2:43 pm

முதலும் சார்பும் அழகாய்,
அழகழகாய் தரித்து
கவி புனைய அவா

உயிரும் மெய்யும் ஒரு
சேர விதவிதமாய்
கவி புனைய அவா

யாப்பும் வெண்பாவும்
கரம் குழைக்கும்
கவி புனைய அவா

மோனை முன்னிறுத்தி
எதுகை எட்டி பிடிக்க
கவி புனைய அவா

சீர்,சீராக செதுக்கி
அணி,அணி வகுக்க
கவி புனைய அவா

வினைத்தொகை விருந்தாக
வினைமுற்று அமுதாக
கவி புனைய அவா

அடுக்குத்தொடர் அழைக்கப்பட்டு
இடைநிலை இணைக்கப்பட்டு
கவி புனைய அவா

லுகரமும்,லிகரமும் வேண்டும்
வேண்டாம் இடம் நின்று
அளபெடை அளவாய் அரங்கேற
கவி புனைய அவா

அறிந்தோர் ஆராய,
இலக்கணம் பிரமிக்க,
படிப்போர் விழி அகல,
கேட்ப்போர் செவிகிற

மேலும்

அறிந்தோர் ஆராய, இலக்கணம்பிரமிக்க ,படிப்போர் விழி அகல , கேட்போர்செவி கிறங்க, விளங்கினார் உயிர் இனிக்க , அன்னைக்காய் என் தமிழ் அன்னைக்காய் கவி புனைய ,அருமைஅருமை புனைந்து விட்டீர் , வாழ்த்துக்கள் புவனா , 05-Nov-2016 5:48 pm
உங்கள் அவா நிறைவேற வாழ்த்துகிறேன்.. 04-Nov-2016 6:37 am
அற்புதமான அவா - கவி புவனவா உங்கள் அவா தொடரட்டும் தோழி 15-Jun-2015 2:43 pm

குடைக்குள் மழை அல்ல
இது அடைமழையான கோடை.,
கோடையில் ஓர் அடைமழை

இரக்கமில்லா அரக்கன் இவன்
வாட்டி வதைக்கும் வஞ்சகன் இவன்,
இவ்வாறு தான் தன் கடமை
தவறா கதிரவனை காய்ச்சியோர் எத்துணை பேர்?

காதில் விழுந்து விட்டதோ என்னவோ பொல்லா கோபக்காரன் ஓடி ஒளிந்து கொண்டு விட்டான் கார்மேகத்துக்குள்ளே வர மறுத்து.,

ஞாயிறு ஞாயிறு கேட்டால் பூமாதேவி என்னவாகுவாள்? கிளம்பி வந்து விட்டான்
வருண பகவான் பஞ்சாயத்துக்கு!

நீண்டநாள் கண்டிரா என் மழைத்தோழியை
சந்தித்து விட்டேன் நான் இச்சர்ச்சையில்

முதல்துளியாய் அழுத்தமாய்
என் நெற்றியில் பதித்து.,என்னடி எப்படி இருக்கிறாய்? என்றாள் என் அன்புதோழி,

தனிமை தகர்க்கிறத

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 19-May-2014 9:57 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 19-May-2014 9:56 pm
nandru bhuvi .... 18-May-2014 6:19 pm
கோடை மழை நல்ல மழை 17-May-2014 8:03 pm

காத்திருக்கிறேன் என் இந்தியாவின்
தலையெழுத்தை மாற்ற போகும்
நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் மாற்றம் ஒன்று நிகழாதா?
அதற்க்கு நாளைய பொழுது அடித்தளமாய்
அமையாதா? என்ற ஏக்கத்தோடு
நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் என் நாட்டுக்காக
சாதி மத பேதங்களை மறந்து,
சொந்த பந்த உணர்வுகளை தவிர்த்து
வாக்களிக்க நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் அரசியல் புனிதம் கெடுத்து
சாக்கடை ஆக்கி விட்ட தீய அரசியல்வாதிகளுக்கு
பாடம் கற்ப்பிக்க நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் காசு கொடுத்து
ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்
முகத்தில் கரி பூச நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன்

மேலும்

நிச்சயம் ஒரு நாள் விடியும் தோழமையே 30-Apr-2014 3:51 pm
மிக்க நன்றி அண்ணா 30-Apr-2014 3:50 pm
வரும் என்றே காத்திருப்போம் தோழமையே கருத்துக்கு நன்றி 30-Apr-2014 3:48 pm
இது தேர்தல் கவிதையல்ல, தொடரும் கதை! காத்திருக்கிறேன் நாளைய விடியலுக்காய்... 25-Apr-2014 9:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (187)

கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (188)

இவரை பின்தொடர்பவர்கள் (188)

R.SATHYARAJ

R.SATHYARAJ

Villupuram
user photo

ஆரியன்

திருவண்ணாமலை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே