பாசத்தின் பைத்தியகாரிக்கு வாழ்த்து - சுடர்

மலரின் சாயலல்ல ,
மான்களின் துள்ளல்ல,
மௌனத்தின் சிகரமல்ல,
மனிதத்தில் சிறந்தவள் ..........

ஈன்றெடுத்த அன்னையல்ல ,
அனுதினமும் காண்பவளல்ல ,
அன்னையின் சாயலல்ல ,
அன்பின் மொழியானவள் ......

எச்சரிப்பில் என் தந்தையாய்,
எஞ்சியபொழுது என் தோழியாய்,
பாசத்தில் பாசங்கில்லாதவள் ,
நேசத்தில் குறைவில்லாதவள் .......
தோல்விகளைக்கண்டு துடிக்கும் பொழுது
தோள் கொடுக்காமல்
தன்னம்பிக்"கை" கொடுத்தவள் ......

என் சினம் உன்மேல் விழுந்தால்
"பாசத்துளிகள் " என்பாய்....
என் செருக்கு உன்மேல் விழுந்தால்
நம் நட்பின் "நெருக்கம் " என்பாய் ......

உன்பாசத்திற்கு,

வான்நிலவும் ஏங்குதடி ,
கடலலையும் காத்துக்கிடக்குதடி,
பூஞ்சோலையும் துடிக்குதடி ,
தார்ச்சாலையும் தவிக்குதடி,
விண்மீன்களும் விரும்புதடி.....

ஈன்றெடுக்கா என் அன்னையே.....
மலரின் மறுவுருவே.....
பாசத்தின் பைத்தியகாரியே .....
என் இனிய நட்பே " இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ".....

நட்புடன்
**********இரா.சுடர்விழி *******

எழுதியவர் : இரா.சுடர்விழி (24-Mar-15, 12:56 pm)
பார்வை : 250

மேலே