பாலியல் மருத்துவர்

அங்க போறாரே அவரு ரொம்ப மோசமான

ஒழுக்கம் கெட்ட மருத்துவரா?

@@@@@@

உனக்கு ஏண்டா இந்த சந்தேகம்?

@@@@@@

நிறியப் பேர் அவரைப் பாலியல்

மருத்துவர்னு சொல்லறாங்களே ஏன்?

@@@@@@@@

நம்ம ஊர் எல்லையிலே ஒரு பால்

பண்ணை இருக்குதில்லையா?

@@@@@@

ஆமாம்.

@@@@@@

அங்க தான் பால் இயல் தொடர்பான

ஆராய்ச்சி செய்யறாரு. நம்ம நாட்டு

மாடுகளில் பல இன மாடுகளின் பால்

மற்றும் ஜெர்சி போன்ற வெளிநாட்டு

மாடுகளின் பால் ஆகியவற்றை ஆராய்ச்சி

செய்து எந்தப் பாலில் சத்து அதிகம்

உள்ளதுங்கிறதைக் கண்டுபிடிக்கப்

போகிறாராம். அதனால் அவர் பதவியின்

பெயர் பால் இயல் மருத்துவர்.

@@@@@@

ஓ ... அப்பிடியா?

எழுதியவர் : அன்புவேல் (5-Aug-25, 10:41 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : paliyal marutthuvar
பார்வை : 15

மேலே