ஊமன் தாராட்ட உறங்கிற்றே இளம் செங்காற் குழவி – முத்தொள்ளாயிரம் 52
நேரிசை வெண்பா
இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரிஇளம் செங்காற் குழவி - அரையிரவில்
ஊமன்தா ராட்ட உறங்கிற்றே! செம்பியன்தன்
நாமம்பா ராட்டாதார் நாடு! 52
= முத்தொள்ளாயிரம்
தெளிவுரை:
சோழன் செம்பியன் பெயரைப் பாராட்டாத, நிலைகெட்டு ஓடிய பகைவர்களின் நாட்டுப் பெண்கள் இலைச்செறிவில் ஈன்ற வரி அமிந்த சிவந்த கால்களை உடைய குழந்தைகள், நள்ளிரவில் கூகைகள் தாலாட்டத் தூங்கின.
செம்பியன் பெயரைப் பாராட்டாதவர்கள் பகைவர்கள்; எனவே, பகைவர்களுடைய நாடுகள் அழிக்கப்பட்டன; கூகைகள் ஓலமிட்டன; அவ்வொலி தாலாட்டைப் போல இருந்தது..
விளக்கம்:
இரியல் – நிலைகெட்டு ஓடல், ஞெமல் – செறிவு, செம்பியன் - சோழன், தாராட்டு – தாலாட்டு,
ஊமன் - கூகை,