காத்திருக்கிறேன் நாளைய விடியலுக்காய் தேர்தல் கவிதை

காத்திருக்கிறேன் என் இந்தியாவின்
தலையெழுத்தை மாற்ற போகும்
நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் மாற்றம் ஒன்று நிகழாதா?
அதற்க்கு நாளைய பொழுது அடித்தளமாய்
அமையாதா? என்ற ஏக்கத்தோடு
நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் என் நாட்டுக்காக
சாதி மத பேதங்களை மறந்து,
சொந்த பந்த உணர்வுகளை தவிர்த்து
வாக்களிக்க நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் அரசியல் புனிதம் கெடுத்து
சாக்கடை ஆக்கி விட்ட தீய அரசியல்வாதிகளுக்கு
பாடம் கற்ப்பிக்க நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் காசு கொடுத்து
ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்
முகத்தில் கரி பூச நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் ஒரு ஊழல் கூட்டத்திடம்
இருந்து மற்றொரு கூட்டத்திருக்கு
என் தேசம் கைமாறி விடக்கூடாது என்ற
ஆதங்கத்தோடு, நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் நாளை வரும் விடியல்
அடுத்து வரும் 5 ஆண்டுக்களுக்கு
என் தாய் மண்ணின் தலையெழுத்து
என்பதால்,நாளைய விடியலுக்காய்.,

காத்திருக்கிறேன் முதல் வாக்கினை பதிவு செய்ய,
முதல் முறையாய் ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும், 30 லட்சம் புதிய,
இளைய தலைமுறை வாக்காளர்களில்
நானும் ஒருத்தியாய்???
நாளை வரும் விடியல் என் பாரதத்துக்கு நல்ல விடியலாய் அமையும் என்னும்
நம்பிக்கையில்,காத்திருக்கிறேன்
நாளைய விடியலுக்காய்...!

எழுதியவர் : புவனா muthukrishnan (23-Apr-14, 9:27 am)
பார்வை : 231

மேலே