மனித நந்தவனத்தில்

மனித நந்தவனத்தில்
மரண குவியல்களுக்கு பஞ்சமில்லை
இன்பகீதங்களுக்கு பதில்
இரங்கல் ராகங்கள்தான் அதிகமாய் ......

சொர்க்கம் என்று சொல்லிக்கொண்டு
நரகத்தையே நாடுகிறது மனித மனங்கள்
அமைதியை துளைத்துவிட்டு
அனுதாபத்திற்கு ஏங்குவது ஏனோ தெரியவில்லை ..........

ஆணிவேரில்லாத
தர்மமும் நீதியும்
அடக்கடி சாய்ந்துபோகிறது
மதப்போர்வையில் .........

வெறிபிடித்த
தந்திர நரிகளிடம்
வேட்டையாகிறது
அப்பாவி முயல்கள் ........

நீருக்கு பதிலாக
உதிரத்தின் ஈரத்தில்
செழிப்பாய் வளர்கிறது
இந்திய ஜனநாயகம் ......

பூக்கள் பூக்கவேண்டிய
பூங்காவனத்தில் புழுக்கள் பொங்கி வழிகின்றன
அனாதைப்பிணமாய் அடையாளம் தெரியாமல் போய்விட்டது
உண்மை .......

சிலந்தி வலைகளுக்குள் சிக்கி
வண்ணத்து பூச்சிகள்
வாழ்க்கையை துளைக்கின்றன
காதலை மிஞ்சும் காமம் ........

இன்றும் மனித நந்தவனம்
மரண நந்தவனமாய் ............

எழுதியவர் : வினாயகமுருகன் (23-Apr-14, 10:33 am)
பார்வை : 57

மேலே