கவி புனைய அவா
முதலும் சார்பும் அழகாய்,
அழகழகாய் தரித்து
கவி புனைய அவா
உயிரும் மெய்யும் ஒரு
சேர விதவிதமாய்
கவி புனைய அவா
யாப்பும் வெண்பாவும்
கரம் குழைக்கும்
கவி புனைய அவா
மோனை முன்னிறுத்தி
எதுகை எட்டி பிடிக்க
கவி புனைய அவா
சீர்,சீராக செதுக்கி
அணி,அணி வகுக்க
கவி புனைய அவா
வினைத்தொகை விருந்தாக
வினைமுற்று அமுதாக
கவி புனைய அவா
அடுக்குத்தொடர் அழைக்கப்பட்டு
இடைநிலை இணைக்கப்பட்டு
கவி புனைய அவா
லுகரமும்,லிகரமும் வேண்டும்
வேண்டாம் இடம் நின்று
அளபெடை அளவாய் அரங்கேற
கவி புனைய அவா
அறிந்தோர் ஆராய,
இலக்கணம் பிரமிக்க,
படிப்போர் விழி அகல,
கேட்ப்போர் செவிகிறங்க,
விளங்கினோர் உயிர் இனிக்க,
அன்னைக்காய்-என்
தமிழ் அன்னைக்காய்
கவி புனைய,
எண்ணில்லா கவி புனைய அவா