ஆரியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆரியன் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 14-Feb-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 267 |
புள்ளி | : 63 |
பெண்ணே...
என்னில் நீ...
கண்களில் பதிந்து...
கருத்தில் நுழைந்து...
நினைவில் கலந்து...
உயிரில் தொலைந்து...
உணர்வுகளைக் கடந்து...
இறுதியில்
என் இதயத்தில்...
லப்டப்...லப்டப்...லப்டப்...லப்டப்...
எதார்த்த பார்வைகள்...
எப்போதாவது பேச்சு...
இருமுறை கைப்பேசி அழைப்பு...
ஒருமுறை வாழ்க்கைப் பற்றிய
உரையாடல்...
எண்ணிவிட்ட கோபம்...
எண்ண இயலாத புன்னகை...
அனைத்தும் எனக்கு
அவள் கொடுத்த பரிசுகள்.
பரிசுகளின் அர்த்தம்
காதலென நினைத்து...
அவளின் பின் நடைபோட்டேன்
சில நிழல்கள் தடுக்கி
திரும்பிப் பார்த்தேன்
என்னைப்போன்று சில ஆண்கள்...
உணர்ந்துகொண்டேன்
காதலென நினைத்தது
நான் மட்டும் அல்ல...
என்னைப்போன்ற சிலரும்.
உடல் ஒட்டிய வயிறு...
கண்ணீர் தீர்ந்த கண்கள்...
உயிர் பிரிந்த உடல்...
உடலைத் தின்ற பசி...
உறக்கம் வெறுத்த வாழ்க்கை...
உலகை தள்ளிய மனம்...
நினைவுகளுடன்
நடைபோடும் கால்கள்...
அவள் பெயரை எழுத மட்டும்
நீளும் கரம்...
இவையெல்லாம்
தேவைதான் எனக்கு.
என் எழுத்துக்கள் மட்டுமல்ல
என்னுடலின் ஒவ்வொரு அங்கமும்
அவள்மீதுள்ள என் காதலை மட்டுமே
வெளிப்படுத்த வேண்டும்.