rajipappa - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : rajipappa |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 529 |
புள்ளி | : 286 |
குளித்துக் கொண்டிருக்கிறது
சாலை நிர்வாணமாய்
அடைமழை!
குளித்துக் கொண்டிருக்கிறது
சாலை நிர்வாணமாய்
அடைமழை!
மறைந்து கொள்ளக் குடை
சாரல் மழை
வரப்பில் பசுந்தளிர்கள் !
வாய்க்கால் வரப்பில்
உரத்த சிந்தனை
வருங்கால விஞ்ஞானிகள் !
நதிநீர் இணைப்பு
முதல்கட்டப் பேச்சு வார்த்தை
பாலர் குழு !
இன்று மழையில்லை
வானிலை அறிக்கை
நம்பிக்கையுடன் கையில் குடை !
நீச்சல் போட்டி
ஓடும் நீரில் மீன்களுக்கு
கரையில் நடுவர்கள் !
அம்மின்னா என்ன மம்மி
என்று கேட்ட மகளுக்கு
கூகுளில் படத்தைக்
காட்டிக்கொண்டிருந்தாள்.
இடத்தை அடைக்கிறது
என்று அம்மியோடு
ஆட்டுக்கல்லையும்
தானம் பண்ணிய
மருமகளை ஓரக்கண்ணால்
பாத்துவிட்டு காணாததுபோல்
திரும்பிக் கொண்டேன் !
அம்மின்னா என்ன மம்மி
என்று கேட்ட மகளுக்கு
கூகுளில் படத்தைக்
காட்டிக்கொண்டிருந்தாள்.
இடத்தை அடைக்கிறது
என்று அம்மியோடு
ஆட்டுக்கல்லையும்
தானம் பண்ணிய
மருமகளை ஓரக்கண்ணால்
பாத்துவிட்டு காணாததுபோல்
திரும்பிக் கொண்டேன் !
நிலவே நீ நலமா
நினைவே நீ சுகமா
நிதமும் உன்னை ரசிப்பேன்
நிழலாய் உன்னைத் தொடர்வேன் !
கனவில் நித்தம் வந்தாய்
கனிந்து முத்தம் தந்தாய்
களவு போன நெஞ்சில்
கவியாய் நீயே நிறைந்தாய் !
மலரின் அழகைப் பூண்டாய்
மழையின் குளுமை கொண்டாய்
மரத்தின் பண்பாய் உறைந்தாய்
மனத்தில் மதுவாய் இனித்தாய் !
கிளியாய்க் கொஞ்சிப் பேசி
கிளிஞ்சல் போலே சிரித்து
கிழிந்த மனத்தைத் தைத்தாய்
கிறுக்குப் பிடிக்க வைத்தாய் !
வனிதை உந்தன் மௌனம்
வருத்தம் கொள்ளச் செய்யும்
வசந்த ராகம் மீட்டி
வடிவாய் வருவாய் அன்பே !
உளத்தில் காதல் பூக்க
உரிமை யாலே அழைத்தேன்
உண்மை யன்பின் வாசம்
உணர்ந்து வாராய் கண
நிலவே நீ நலமா
நினைவே நீ சுகமா
நிதமும் உன்னை ரசிப்பேன்
நிழலாய் உன்னைத் தொடர்வேன் !
கனவில் நித்தம் வந்தாய்
கனிந்து முத்தம் தந்தாய்
களவு போன நெஞ்சில்
கவியாய் நீயே நிறைந்தாய் !
மலரின் அழகைப் பூண்டாய்
மழையின் குளுமை கொண்டாய்
மரத்தின் பண்பாய் உறைந்தாய்
மனத்தில் மதுவாய் இனித்தாய் !
கிளியாய்க் கொஞ்சிப் பேசி
கிளிஞ்சல் போலே சிரித்து
கிழிந்த மனத்தைத் தைத்தாய்
கிறுக்குப் பிடிக்க வைத்தாய் !
வனிதை உந்தன் மௌனம்
வருத்தம் கொள்ளச் செய்யும்
வசந்த ராகம் மீட்டி
வடிவாய் வருவாய் அன்பே !
உளத்தில் காதல் பூக்க
உரிமை யாலே அழைத்தேன்
உண்மை யன்பின் வாசம்
உணர்ந்து வாராய் கண
இதழ் விரித்த
ரோசாவே !
மொட்டவிழு முன்
மணத்தை எங்கு
மறைத்து வைத்தாய் ??
உன்கைப்பட்ட
ரசமோ
தித்தித்ததென்றேன் !
காதலாள் வெட்கத்தால்
கன்னஞ் சிவந்தாள் ......
உப்புக்குப் பதிலாய்
சீனி போட்ட வஞ்சியவள்
வஞ்சப்புகழ்ச்சியை உணராமல் !!!!
இதழ் விரித்த
ரோசாவே !
மொட்டவிழு முன்
மணத்தை எங்கு
மறைத்து வைத்தாய் ??
நீ செல்லும் வழிகளில்
ஆயிரம் பூக்கள்
மலர்ந்திருந்தாலும்
உனக்காகப் பூத்திருக்கு
என்றும் வாடா
முள்ளில்லா ரோஜா
என் இதயத்தில் ...!!
நீர் விடவேண்டா
உதிரத்தால் நனைப்பேன்
பட்டுப் போகாமல்
காப்பேன் என்
ஆயுள் வரை ....!!
ரோஜாவும்
புன்னகைத்தபடியே
காத்திருக்கிறது
உன் காதோரம்
காதலில் மலர !
அறியா பருவத்தில்
தோட்டத்து மாமரத்தில்
காய்த்துக் குலுங்கிடும்
மாங்காய்களை
சீக்கிரம் பழுத்துவிடும்
என்ற நம்பிக்கையோடு
பச்சரிசி பற்களால்
கொறித்து வைக்க ....
அம்மா வந்து
" ஒரு பழத்தைக் கூட
விளைய விடாது போல ...!
கொரிச்சுக் கொரிச்சி போடுதே ...!"
என்று அணிலை ஏசும் போது
மனதின் மூலையில்
பளிச் புன்னகை மலரும் !
பாவம் ஓரிடம்
பழியோ வேறிடம் ....!!