பாவம் ஓரிடம் பழி வேறிடம்

அறியா பருவத்தில்
தோட்டத்து மாமரத்தில்
காய்த்துக் குலுங்கிடும்
மாங்காய்களை
சீக்கிரம் பழுத்துவிடும்
என்ற நம்பிக்கையோடு
பச்சரிசி பற்களால்
கொறித்து வைக்க ....

அம்மா வந்து
" ஒரு பழத்தைக் கூட
விளைய விடாது போல ...!
கொரிச்சுக் கொரிச்சி போடுதே ...!"
என்று அணிலை ஏசும் போது
மனதின் மூலையில்
பளிச் புன்னகை மலரும் !
பாவம் ஓரிடம்
பழியோ வேறிடம் ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (27-Jan-16, 9:46 pm)
சேர்த்தது : rajipappa
பார்வை : 86

மேலே