வெதயப் போட்டா கண்ணால

வெதயப் போட்ட கண்ணால
வெளஞ்சு வாறே உன்னால
மேனி எல்லா பொன்னால
மினுமினுக்குது தன்னால....

சொல்ல நெனக்கும் வார்த்தையெல்லாம்
வரிஞ்சு கட்டுது ஒனப்பாத்தா
கிட்ட எட்டிப் போகையில
கிறுக்கா மாறுதே ஏஆத்தா ....

எட்டி எட்டி பாக்கையில
இளச்சுப் போதே என்னுசுரு
முட்டி முட்டி நானுழுதே
திட்டி நீ போகையில....

கடந்து போற முன்னால
தொடந்து வாறே பின்னால
திரும்பித்தா எனப்பாத்தே
சிருச்சா என்ன பூங்காத்தே
ஓ ரெண்டு விழியால
விடியக் காலையில சுழிகாத்து
வெரட்டி அடிக்க எனநேத்து...

நிறுத்த(ம்) நிறுத்தமா நின்னு
உன்ன மட்டு பாக்க எங்கண்ணு
ஓரப் பார்வயில ஒங்கண்ணு
முழுசாக் கொல்லுதடி தூர நின்னு...

எந்தக் கால மானாலும்
நீ தாண்டி எம்மூச்சு
ஓ உசுரு போகுமுன்ன
ஏ உசுர எடுக்க மாட்டான்
எப்பக் கட்டி இழுத்தாலும்
ஏமாந்து போவா எமனுமே ...

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (27-Jan-16, 10:19 pm)
பார்வை : 80

மேலே