எஞ் சந்தனமே
சாந்து பொட்டு வச்சு வந்த
சந்தனமே உன்ன பாக்க வந்தே
கரும்பா நா உனப் பாத்து
எறும்பா நா மாறி போறேன்
குறும்பு சேட்ட நீ செஞ்சா
மனசு மாறு வெம் பஞ்சா
கஞ்சா போல எனக் கசக்கி
மாஞ்சா போல இழுத்து உட்ட
திட்ட மேது எனகில்ல
கிட்ட வந்து தொட்டுப் பாக்க
கட்டிப்போட்டு என்ன நீயும்
பிச்சுப் போடி என் உசுர
அசர மாட்டா ஆளு நானு
அசந்து கூட போவ நீனு
ஒன்னால நாங் கருத்தேன்
ஓங் கண்ணால நா சிரிச்சேன்
பின்னால நாந் திரிஞ்சு
உள்ளாற நாங் கரஞ்சே
சொல்லாம நீ அரிச்ச
என் உசுரத்தா நீ கொறிச்ச
சொல்லால நீ வெறுத்த இருந்து(ம்)
சொல்லுக்காக நா பொறுத்தேன்
உங்கண்ணு சாட்டையடி
பாக்கையில விழுதே சாட்டை அடி
சாட்டையில என சுத்துறடி பம்பரமா
கத்திக்கிட்டே சுத்திக்கிறே
சாட்டையதா பாத்துக்கிட்டே
வெள்ளத் தாளு பக்கமெல்லா
பாக்கி இல்ல நீ நெறஞ்ச
திருப்பித்தா பாக்கையில
தாளுக்குள்ள நாந் தொலைஞ்சே.