என்னவள்

உன்கைப்பட்ட
ரசமோ
தித்தித்ததென்றேன் !
காதலாள் வெட்கத்தால்
கன்னஞ் சிவந்தாள் ......
உப்புக்குப் பதிலாய்
சீனி போட்ட வஞ்சியவள்
வஞ்சப்புகழ்ச்சியை உணராமல் !!!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (4-Sep-16, 12:46 am)
பார்வை : 90

மேலே