அம்மின்னா என்ன மம்மி

அம்மின்னா என்ன மம்மி
என்று கேட்ட மகளுக்கு
கூகுளில் படத்தைக்
காட்டிக்கொண்டிருந்தாள்.

இடத்தை அடைக்கிறது
என்று அம்மியோடு
ஆட்டுக்கல்லையும்
தானம் பண்ணிய
மருமகளை ஓரக்கண்ணால்
பாத்துவிட்டு காணாததுபோல்
திரும்பிக் கொண்டேன் !

எழுதியவர் : ராஜ லட்சுமி (20-Sep-16, 12:53 pm)
சேர்த்தது : rajipappa
பார்வை : 90

மேலே