நேசிக்கும் இதயம்

உனக்கு பிடித்த பலரிடம்
பழகுவதை விட
உன்னை மட்டுமே பிடிக்கும்
ஒருவரிடம் பழகி பார்...
உன்னையே நீ புரிந்து கொள்வாய்...

அன்பு நிறைந்த உள்ளம்
தான் சண்டை போடும்
விலக அல்ல விலகி
விட கூடாது என்பதற்காக...

பாசத்திற்காக உயிரை
கொடுப்பது சுலபம்
ஆனால் உயிரை
கொடுக்கும் அளவுக்கு
பாசம் கிடைப்பது கடினம்...

சிலரின் மீது தோன்றும்
அன்பு காலா காலத்திற்கும்
அழியாது... பேசாமலே
இருந்து விட்டால்
அழிந்து போவது மொழிகள்
மட்டும் அல்ல
உறவுகளும்தான்...

உயிர் விட்டு போகும்
வலியை விட
உண்மையான உறவு
விட்டு போகும் வலி
மிகவும் கொடுமையானது...

சிலரிடம் பேசினால் நிம்மதி
சிலரிடம் பேசாமல் இருந்தால்
நிம்மதி...

யாருமே இல்லாமல் இருப்பது
தனிமை அல்ல...
சுற்றி எல்லோரும் இருந்தும்
யாருமே இல்லாத ஓர்
உணர்வே தனிமை...
யாரையும் அதிகம்
நேசிக்காதே... அவர்கள்
நம்மிடம் பேசாத ஒவ்வொரு
நிமிடமும் நரகமாகிவிடும்...

யாருக்காக நம்மை மாற்றி
கொள்கிறோமோ அவர்கள்
வேறு யாருக்காகவோ நம்மை
விட்டு பிரிந்து செல்கிறார்கள்...

நம் இதயம் எந்த அளவுக்கு
பிடித்தவர்களிடம் சண்டை
போடுகிறதோ அந்த அளவுக்கு
அவர்களிடம் இருந்து அன்பை
எதிர்பார்க்கும்...

நீ நேசித்த இதயத்தை
ஏமாற்றி விடாதே...
பின்பு நீயே தேடி
சென்றாலும் நேசித்தாலும்
அது உன்னை நேசிக்காது...

வாழ்க்கையில் யாரும்
கற்று தராத சில பாடத்தை
தனிமை நமக்கு புரிய
வைத்து விடுகிறது...

வாழ்க்கையில் யாரையும்
நம்பி வாழ்ந்து விடாதே...
யாரிடம் அதிகம் அன்பு
வைக்கிறோமோ... பிரியும்
நேரத்தில் அழுவது உன் கண்களாக
இருக்காது...
உன் இதயமாக இருக்கும்...

மனம் திறந்து பேசுங்கள்
ஆனால் மனதில் பட்டதை
எல்லாம் பேசாதீர்கள்...
சிலர் புரிந்து கொள்வார்கள்...
சிலர் பிரிந்து செல்வார்கள்...

எழுதியவர் : பவநி (20-Sep-16, 1:11 pm)
Tanglish : nesikkum ithayam
பார்வை : 3176

மேலே