ஹைக்கூ
![](https://eluthu.com/images/loading.gif)
மறைந்து கொள்ளக் குடை
சாரல் மழை
வரப்பில் பசுந்தளிர்கள் !
வாய்க்கால் வரப்பில்
உரத்த சிந்தனை
வருங்கால விஞ்ஞானிகள் !
நதிநீர் இணைப்பு
முதல்கட்டப் பேச்சு வார்த்தை
பாலர் குழு !
இன்று மழையில்லை
வானிலை அறிக்கை
நம்பிக்கையுடன் கையில் குடை !
நீச்சல் போட்டி
ஓடும் நீரில் மீன்களுக்கு
கரையில் நடுவர்கள் !