புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார் - கார் நாற்பது 11

இன்னிசை வெண்பா

புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,
வணர்ஒலி ஐம்பாலாய்! வல்வருதல் கூறும்-
அணர்த்தெழு பாம்பின் தலைபோல் புணர்கோடல்
பூங்குலை ஈன்ற புறவு! 11

- கார் நாற்பது

பொருளுரை:

குழற்சியையுடைய தழைத்த கூந்தலையுடையாய்! மேனோக்கியெழும் பாம்பினது படத்தைப் போல பொருந்திய வெண்காந்தள்கள் பூக்கொத்துக்களை யீன்ற காடுகள் (இம்மை மறுமையின்பங்கள்) பொருந்துதலையுடைய பொருளை கொண்டு வர பிரிந்து சென்ற தலைவர் விரைந்து வருதலை கூறும்!

வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி ஒலி - தழைத்தல்; ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது;

கூந்தல். ஐந்து பகுப்பாவன - குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப.

இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம்.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (31-Aug-25, 1:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே