சீர்காழி சபாபதி - சுயவிவரம்

(Profile)நடுநிலையாளர்
இயற்பெயர்:  சீர்காழி சபாபதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Feb-2012
பார்த்தவர்கள்:  5744
புள்ளி:  2446

என்னைப் பற்றி...

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு,
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்...

எழுதலாம் தமிழில் எளிதாக!
நேரடியாக தமிழிலேயே எழுதுங்கள்.

நாம் இணையதலத்தில் தமிழில் எழுதவும், இல்லத்து கணினியில்
தமிழில் எழுதவும் உதவும் இலவச மென்பொருள் – அழகி
முகவரி: http://www.azhagi.com இல் சென்று, பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
அல்லது இணையத்தில் - http://tamileditor.org/ தளம் சென்று தட்டச்சு செய்யலாம்.
தோழர்களே.. தமிழில் அழகாக எளிதாக எழுதுங்கள்.
இன்னுமின்னும் சிறப்பாக கவிதைகளை எழுதுங்கள், வாழ்த்துக்கள்...

என் படைப்புகள்
சீர்காழி சபாபதி செய்திகள்
சீர்காழி சபாபதி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2019 8:27 pm

கனிமம் என்றால் அது காண அரிதானது - எந்த
காரணியாலும் அதைக்கொடுக்க முடியாதது

கிடைக்கும் இடத்திலிருந்து அதை எடுத்துவிட்டால்
கிழப்பருவம் எய்தியதைப் போல் மாறும் அவ்விடம்

காகித காசுக்காக கடைத்தெருவில் விற்றுவிட்டால்
கடுந்துன்பம் பற்றி உருக்குலைந்து போவோம்

மண்ணும் மலையும் மரமும் மணலும் ஒரு நாள் போனால்
உன்னால் என்னால் உயர்வான அறிவியலால் உருவாக்கலாமோ

தன்னாலே உருவான தனித்துவத்தை - மனித
தவறால் உருக்குலைத்தல் செய்வது உயர்வோ?
---- நன்னாடன்.

மேலும்

மனிதனின் மன்னிக்க முடியாத இயற்கைக்கு எதிரான தவறுகள் நடக்கும் நூற்றாண்டில் வசிக்கிறோம் இதை இயற்கை எவ்வாறு எதிர்வினையாய் காட்டப் போகுதோ அப்போது தான் மனிதன் மிகப் பெரிய தண்டனைப் பெருவான் அவனைக் காக்க எந்த பூதமும் உதவாது என்பதற்கான பதிவே இது திரு. மரு. ஏ. எஸ். கந்தன் அய்யா அவர்களே பார்வைக்கும் கருத்திடலுக்கும் நன்றி. 10-Jul-2019 7:37 pm
மனிதனின் மன்னிக்க முடியாத இயற்கைக்கு எதிரான தவறுகள் நடக்கும் நூற்றாண்டில் வசிக்கிறோம் இதை இயற்கை எவ்வாறு எதிர்வினையாய் காட்டப் போகுதோ அப்போது தான் மனிதன் மிகப் பெரிய தண்டனைப் பெருவான் அவனைக் காக்க எந்த பூதமும் உதவாது என்பதற்கான பதிவே இது திரு. சீர்காழி சபாபதி அவர்களே பார்வைக்கும் கருத்திடலுக்கும் நன்றி. 10-Jul-2019 7:36 pm
இயற்கை ஆர்வலர்களின் நியாயமான வாதம் கிடைக்கும் இடத்திலிருந்து அதை எடுத்துவிட்டால் கிழப்பருவம் எய்தியதைப் போல் மாறும் அவ்விடம் ,,,,அழகான வர்ணனை 10-Jul-2019 9:23 am
தன்னாலே உருவான தனித்துவத்தை - மனித தவறால் உருக்குலைத்தல் செய்வது உயர்வோ??? -வரிகள் இன்றைய நாட்டின் நிலைமை! உண்மை! 10-Jul-2019 9:14 am
சீர்காழி சபாபதி - Kaviyakadhali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2019 6:55 am

ஆங்காங்கே மழைத்துளிகள்
பெரிதாய் கூட கூட
எனக்குள் எழும் வலிகள்
இன்னல்ஙள் யாவும்
மறைந்திடவே
மெல்ல நனைந்திட்டேன்
என்னுள் ஏற்படும்
மாற்றங்கள் எண்ணிலடங்கா
கூற வார்த்தைகள் இல்லை
மெதுவாய் நகரும் இரவினையும்
பெரிதாய் தொடங்கும் தூரலையும்
ரசித்தே
மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்தேன்
அதோ எனக்கான விடியல்
சூரியன் பார்த்திட சில
காலத்தள்ளுதலில்
என் முதல் பயணம்
தொடங்கிவிட்டது
முதல் தளிராய்🌱
இப்படிக்கு
தேடுதலின்றி தவித்த விதை 🌱🌱🌱🌱

மேலும்

தேடலே வாழ்வின் பயணம்! 10-Jul-2019 9:11 am
சீர்காழி சபாபதி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2019 8:50 am

மனிதா மனிதா மகத்துவ மனிதா
மனதின் மகத்துவம் அறிந்தது உண்டா

எதையும் வெல்லும் திறன் உனக்கு உண்டு
எவ்வாறு என்று உன் மனதைத் தூண்டு

பஞ்சை நூலாய் பண்ணியவன் மனிதன்
நெஞ்சில் எண்ணம் தோன்றியதனாலே

காற்றை ஆக்க காற்றாடி செய்தான்
கடும் வெப்பம் கண்டு உடல் சோர்ந்ததாலே

பாதம் தேய்ந்து உடல் பலமிழந்ததாலே
பாதுகை ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டான்

பல்வகை உழைப்பை செய்ய முடியாதவனே
பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்துக் கொடுத்தான்

நீரினில் பயணிக்க நினைத்தவன் மனமே
நாவாய் ஒன்றை கடலில் ஓட்டியது தினமே

பலமான மனதைப் பக்குவப் படுத்தி
வளமான வாழ்வை வாழ்ந்திடப் பழகு.
----- நன்னாடன்.

மேலும்

திரு. சீர்காழி சபாபதி அவர்களின் கருத்திடலுக்கும் பார்வைக்கும் நன்றிகள் பல பல 10-Jul-2019 7:30 pm
திரு சக்கரை அய்யா அவர்களின் கருத்திடலுக்கும் பார்வைக்கும் நன்றிகள் பல பல 10-Jul-2019 7:30 pm
அருமையான உணர்வுப் பதிவு . " பல்வகை உழைப்பை - - - - " என்று தொடங்கும் வரிகள் அற்புதம் ஐயா 10-Jul-2019 10:18 am
நன்று நன்று! சிந்தனை செய் மனமே, சிந்தனை செய் என்கிறீர்கள்... 10-Jul-2019 9:09 am

தாயின் வயிற்றில் பத்து மாதம்
இருந்து வளர்ந்து தாய் பிறப்பு தர
வெளிவந்தேனடி uyir துடிப்போடு
இதயத் துடிப்பாய்- பின் வளர்ந்து
ஆளான நான் முதல் முதலாய் உன்னை
சந்தித்தேன் , உன் பார்வையில் என்னை
இழந்தேன் , ஒரு நொடி என் இதயம் நின்றதடி
மறு நொடியில் மீண்டும் துடித்தது -ஏன்
ஏன் இதயத்தில் நீ புகுந்தாய் ஏன் உயிர்க்குயிராய்
ஏன் உயிரில் கலந்து

மேலும்

நன்று 10-Jul-2019 9:27 pm
இப்படி அமைந்தால் நன்றாகவே இருக்கிறது நண்பரே சபாபதி நன்றி 10-Jul-2019 9:27 am
தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து வளர்ந்து தாய் பிறப்பு தர.. வெளிவந்தேனடி உயிர்த்துடிப்போடு இதயத் துடிப்பாய் பின் வளர்ந்து ஆளான நான் முதல் முதலாய் உன்னை சந்தித்தேன்! உன் பார்வையில் என்னை இழந்தேன்! ஒரு நொடி என் இதயம் நின்றதடி மறு நொடியில் மீண்டும் துடித்தது - ஏன்? என் இதயத்தில் நீ புகுந்தாய்! என் உயிர்க்குயிராய் என் உயிரில் கலந்து... கவிதை நன்று! இப்படி வரிவடிவம் அமைந்தால் நன்றாக இருக்கிறதல்லவா? 10-Jul-2019 9:03 am
சீர்காழி சபாபதி - RAMALAKSHMI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2019 10:19 pm

ஏமாந்த மனது
ஏக்கத்தின் முடிவில்
கற்றுக்கொடுத்தது
வாழ்வின் வழி ஒன்றல்ல
பல்நோக்கு பார்வை
பலரின் அறிவுரை
பல நல்ல உள்ளங்கள்
இது மட்டும் மூலதனம்
சாதிக்கலாம் வாழ்வில்
பலகோடி சாதனை..........

மேலும்

ஆம்! ஆம்! சாதிக்கலாம்! நல்லவராகவும், வல்லவராகவும் வாழ கற்றுக்கொண்டால்.. 07-May-2019 2:14 pm
முரண்பட்ட சமூகத்தில் முயற்சிதான் வெற்றி 03-May-2019 11:15 pm
சீர்காழி சபாபதி - RAMALAKSHMI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2019 8:13 am

நேர்மறை விதையை
ஆழமாய் ஊன்று
மாணவன் மனதில்!!!
ஊக்குவி மாணவனை
நல்லதொரு வார்த்தைகளால்!!1
கவனி அன்பான வார்த்தைகளால்!!
என்றும் நீரூற்று
அதிசய நன்னெறி கதைகளால்!!
என்றும் விளம்பரம் செய்யாதே
உன் படைப்புகளை!!
மாணவனின் தேவைகளை என்றும் நிவர்த்தி செய்
அவன் உன்னை தேடும்பொழுது!!
எவரின் உணர்ச்சிகளையும் அவமதிக்காதே!!
என்றும் எவரையும் சமமாய் மதி
எதற்கும் ஏற்றத்தாழ்வு பார்க்காதே
என்றும் எல்லாரையும் சமமாய் மதி .......

மேலும்

மாணவருக்கு என்றும் இதுவே அன்பின் வழி...🙂 07-May-2019 2:38 pm
என்றும் எல்லாரையும் சமமாய் மதி - இன்றைய தேவை! மனிதர்க்கு இது, என்றும் தேவை! 07-May-2019 2:12 pm
சீர்காழி சபாபதி - மேகலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2018 7:27 pm

ஒரு முத்தம் கொடுக்க
இவ்வளவு வெட்கமா என
சிரித்தாள் வெண்ணிலா

நான் வேண்டுமானால்
கண்களை மூடிக்கொள்ளவா
என்றாள் மின்மினி

சுற்றி வேறுயாரவது பார்க்கலாம்
என்ற சந்தேகத்தில் பார்வையை
செலுத்தினேன் அல்லியின் மீதும்
அடக்கத்தை என்ன விலையென்று
கேட்கும் அழகியாயிற்றே அவள்

அப்படியே மணத்தால் என்னை
திருட முயற்சிக்கையில்தான்
தெரிந்து கொண்டேன் மல்லிகையும்
அருகில்தான் ஒளிந்திருக்கிறாள் என்று

எல்லோரும் என்னையே உற்றுப்பார்த்தபடி
இருக்க எனக்கு மட்டும் ஏன்
கூடிக்கொண்டே இருக்கிறது வெட்கம்
என்ற சுயசோதனையில் இருந்து
மெதுவாய் வெளிவந்து தப்பிக்கையில்தான்
என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டத

மேலும்

நன்றி 17-Jun-2019 3:00 pm
அருமை 16-Jun-2019 5:54 pm
நன்றி 11-Jun-2019 1:50 pm
விண்ணிலவும் பொன்னொளியில் முத்தம் ஒன்று - மேக வெள்ளாடை விலக்கியவள் என்னைக் கேட்க, என்மனதில் ஊறியெழும் ஆசைதன்னை - மீறி எப்படிநான் தருவதென்று கூசும் போது, மின்மினிதன் கண்மூடிக் கொண்டா ளஅங்கே - வாச மெல்லியலாள் அல்லிவிழி விரியப் பார்த்தாள்! தன்மணத்தால் உன்மனத்தை வெல்லும் - வ்ஞ்சி மல்லிகையும் இதழ்விரிய மலர்ந்து நின்றாள்! இன்னவர்கள் எனைச்சுற்றிப் பார்த்து நிற்க - எனக்குள் எழுந்தாடும் வெட்கத்தை மெல்ல வென்று எண்ணுகையில் முத்தாட இதயந்தன்னில் - பொங்கி இறங்கியதே தாழையெனும் காதல் காதல்! --- நல்ல கவிதைக்கு வெறும் வார்த்தைகள் தக்க பரிசாகாதல்லவா? அதனால் உங்களது கவிக்கருவினையே என் கவிவிதையாக்கி ஒரு சிறிய "பாமாலைப் பரிசு! கவிஞர் மேகலை! 08-Jun-2019 11:40 am
சீர்காழி சபாபதி - மேகலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2019 8:40 pm

கனவுகளுக்குள் இறங்கி
தூர் வார தொடங்கினேன்
மீண்டும் பெய்யத்தொடங்கியது
பெருமழை
அவள் நினைவுகளாய்
என்னை சூழ்ந்தபடி

குறை சொல்லாமல்
இரவுகளை கடந்திட
பழக்கியவள் அவள் தான்

அப்படியே தாலாட்டில்
தாய்மடியென தன் நெஞ்சில்
என்னை அவள் புதைத்ததும்
அறிய மழைநாள் தான்

முழுதாய் ஒரு முத்தத்தை
நீலசோறெனவே ஊட்டியவள்

வேம்பு நிழலாய் வீழ்ந்து கிடந்தாலும்
பூமியையும் என்னையும் குளிர்ச்சியாய்
வாரி அணைக்கும் பெருந்தகையாள்

தினவெடுத்த நேரங்களில்
எல்லாம் வேள்வித்தீயாய் சூழ்ந்து
வியர்வை மழையாய்
பொழிய தவறாதவள்

ஒரு பொய் சொல்லிக்கொள்கிறேன்
என கெஞ்சும் போதும் கொஞ்சும் போதும்
போதுமென்று சொல்லும் வரை
மனதை குழையவ

மேலும்

கவியின் சாரல் மிக அழகாக வரிகளாக! அடடா இனிமை!! நீலசோறெனவே ஊட்டியவள் = நிலாசோறெனவே ஊட்டினாள் 07-May-2019 2:07 pm

அன்பினிய காலை வணக்கம்!

மேலும்

இனிய காலை வணக்கம்!

மேலும்

நம் பிள்ளைகள் 
நம் தொருவில் விளையாட 
எவனோ இங்குவந்து தடைபோட்டன்! 
உறுதியாக ஒன்றினைந்து 
இறுதிவரை போராடி 
வென்றார்கள் அவர்கள் 
இளம் பட்டாளம்! 
அவர்களின் வாழ்வுக்கு 
அவர்களே மாற்றம் போட்டார்கள்! 
நாடாண்ட கும்பல் 
பன்னிய அட்டுழியம் 
நெருப்பாக நெஞ்சில் 
இன்னும் இருக்கிறது! 
என் தமிழா! இளைஞா! 
பித்தலாட்டம் செய்தேனும் 
நாடால துடிக்கும் 
பதவிக்கு பாய்ந்துவரும் 
நயவஞ்சக நரிக்கூட்டம்! 
தான் செழிக்க 
தமிழகம் அழிக்க 
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா 
நாளையும் உன் நாடும்? வீடும்? 
விட்டுவிட்டதனால்.. 
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்! 
நம் அனைவரின் உழைப்பை 
தின்று கொழுக்கும் களைகள்! 
தூக்கியெறி துரோகிகளை 
விரட்டியடி வெறியர்களை 
புதியவர்கள் இளையவர்கள் 
நல்லவர்கள் நன்மைசெய்ய 
மாற்றம் அமைப்போம்! 
மாற்றம் வரவைப்போம்! 
நல்ல தமிழினம் அமைப்போம்! 
நம்மை புதிதாக வளர்ப்போம்!  

மேலும்

விழிப்புஉணர்வுப் படைப்பு பாராட்டுக்கள் 17-Mar-2017 4:39 am
சீர்காழி சபாபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2017 11:43 am

நம் பிள்ளைகள்
நம் தொருவில் விளையாட
எவனோ இங்குவந்து தடைபோட்டன்!
உறுதியாக ஒன்றினைந்து
இறுதிவரை போராடி
வென்றார்கள் அவர்கள்
இளம் பட்டாளம்!
அவர்களின் வாழ்வுக்கு
அவர்களே மாற்றம் போட்டார்கள்!
நாடாண்ட கும்பல்
பன்னிய அட்டுழியம்
நெருப்பாக நெஞ்சில்
இன்னும் இருக்கிறது!
என் தமிழா! இளைஞா!
பித்தலாட்டம் செய்தேனும்
நாடால துடிக்கும்
பதவிக்கு பாய்ந்துவரும்
நயவஞ்சக நரிக்கூட்டம்!
தான் செழிக்க
தமிழகம் அழிக்க
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா
நாளையும் உன் நாடும்? வீடும்?
விட்டுவிட்டதனால்..
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்!
நம் அனைவரின் உழைப்பை
தின்று கொழுக்கும் களைகள்!
தூக்கியெறி துரோகிகளை
விரட்

மேலும்

பதிவிற்கு வாழ்த்துக்கள் சூறாவளி .... 12-Jun-2017 1:37 pm
தங்கள் கருத்தில் மகிழ்ச்சி! 15-May-2017 8:16 pm
நல்லோரின் எதிர்பார்ப்பு. 15-May-2017 12:47 am
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள தோழமை கவிஞரே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 5:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1403)

RAMALAKSHMI

RAMALAKSHMI

DINAMANI NAGAR
மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்
பவுன் குமார்

பவுன் குமார்

திருவண்ணாமலை
user photo

கிருஷ் அரி

பூந்தமல்லி ,சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1412)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
nellaiyappan

nellaiyappan

நெல்லைக்கிராமம்
சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (1408)

kalapriyan

kalapriyan

Tirunelveli
user photo

தமிழவன் சங்கர்

திருப்பத்தூர்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே