பெண்ணே நீதான் பிரம்மனின் பிம்பம்
நீலம் நிறைந்த கண்களின் பார்வை
நெருஞ்சி முள்ளென தைத்தது நெஞ்சை
சுருண்ட கூந்தல் புரளும் முகத்தில்
இருக்கும் பருவும் அழகின் வடிவில்
சிரிக்கும் பொழுதில் குழியும் கன்னம்
மனதை பிசையும் எழில் வடிவமாகும்
பல்லின் வரிசை கொள்ளை அழகு
மூக்கின் வடிவம் முறையான சிற்பம்
பெண்ணே நீதான் பிரம்மனின் பிம்பம்
உன்னைக் கண்டேன் உள்ளொளி பெற்றேன்
நோக்கும் இடமெல்லாம் உன்னுரு கண்டேன்
வெண்ணெய் உருகி நெய்யாவதைப் போலே
என்னுள் உன்னை உருக்கிக் கொண்டேன்
------ நன்னாடன்.