உனக்கே நல்லாயிருக்கா?

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

நேற்று வரை
என்னை காதலித்து விட்டு
இன்று
என் காதலை அழித்துவிட்டு
மணவறைக்கு போகும் பெண்ணே..!

உன் வீட்டு வாசலில்
வெட்டிக்கட்டிய
வாழையாக
என்னுயிர் வாடுதடி...

உன்னோடு வாழ்கின்ற பாக்கியம்தான் கிடைக்கவில்லை....
உன்னை
வாழ்த்துகின்ற பாக்கியமாவது கிடைக்குமா...?

மாக்கோலம் போட்டு விட்டு
என் கோலம் நல்லாயிருக்கிறதா? என்று கேட்பாயே!
ஆனால்
இன்று
நீ மணமகள் கோலத்தைப் போட்டு இருக்கிறாய்
நான் கேட்கிறேன்
இது உனக்கே நல்லாயிருக்கிறதா?

மணமக்களின்
மனம் மாற்றி
திருமணம் நடத்தாமல்
வெறும்
மாலையை மாற்றி
திருமணம் நடத்தும்
பெற்றோர்களுக்கு
நம் காதல் எங்கே
புரியப்போகிறது....?

நம் காதல்
தோற்றுவிட்டது என்று
கண்ணீர் வடிக்காதே!
காதலில் மட்டும்
தோல்வியடைந்த காதலே
உண்மையில்
வெற்றி பெற்ற காதலாகும்...!!!


*கவிதை ரசிகன்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-May-21, 8:14 pm)
பார்வை : 95

மேலே