மதனோற்சவம்💋

மதனோற்சவம்💋

அந்தி வானம்
ஆரஞ்சு புடவையை
உடுத்தி கொள்ள
தென்றல் அது மல்லிகையை
முத்தமிட்டு தவழ்ந்து செல்ல
வழி தவறி வந்த
வானத்து தேவதையை
வண்ண மலர் கூட்டம்
வரவேற்று
தலைவனின்
விலாசம் சொல்ல
வழி மீது விழி வைத்து
காத்திருந்த தலைவன்
வானமங்கை அழகில் கிறங்கி
மயங்கி
இன்ப கடலில் மிதந்தான்
கவிதையை கற்பித்தாள்
அவள் கண்களால்
மாணவனாக மாறிய தலைவன்
மாதுளை இதழ்களின்
வரிகளில் வென்பா
எழுத தொடங்கினான்
சொக்கிபோன இந்திரலோகத்து
சுந்தரி 
புஜபல பராக்கிரமசாலி
தோள் மீது
முல்லை கொடி என படர
இடை வளைத்த இளவல்
இருவர் இடைவெளி
குறைத்தான்
காற்று காதலர்களிடையே
செல்ல வெட்கபட
விட்டல் பூச்சி இரண்டும்
காம விளக்குக்கு அடிமையாகி
எண்ணெயில் தவறி விழுந்து
இன்பத்தில் திளைத்து
தும்பி அது துவளாமல்
மலரின் தேனை பருக
காம கோட்டை
வாசலை திறக்க
வாலிப வேட்டை
விறுவிறுப்புடன் நிகழ
காம சேட்டைகள் களிப்புடன்
அரங்கேற
மதன மாளிகையில்
மன்மதலீலை பயில
இளமை திருவிழா
கோலாகலமாக நடக்க
தேக சாந்தி பூஜை
நேர்த்தியுடன் நிறைவேற
சிற்றின்ப சித்தாந்தம்
சிறப்புடன் நடந்தது.
- பாலு.

எழுதியவர் : பாலு (3-May-21, 8:41 pm)
சேர்த்தது : balu
பார்வை : 144

மேலே