துணி சோப்பா குளீயல் சோப்
ஏண்டப்பா வடக்க வேலை பாக்கிறவனே, உன்ற
மனைவிக்கு குழந்தை பொறந்திருச்சா?
@@@@
நேத்துத்தான் பாட்டி என் மனைவிக்கு ஆண்
குழந்தை பொறந்திருக்குதுன்னு தகவல்
வந்துச்சு. மூணு மடங்கு அதிக விமானக் கட்டணம்
செலுத்திப் பறந்து வந்தேன் பாட்டி.
@@@##@@@@@@
சந்தோசம்டா தன்னுராசு. உம் பையனுக்கு
வைக்கப் போற இந்திப் பேரு என்னடா
தன்னுராசு.
@@@@@@@
எம் பேரு தனராஜ். வடக்க போனதுக்கு அப்பறம்
எம் பேரை 'தன்ராஜ்'ன்னு மாத்திட்டேன்..நீங்க்
என்ற பேரை 'தன்னுராசு'ன்னு சொல்லறீங்க.
@@@@@@@@@
நாங் கேட்டது என்னடா தன்னுராசு ஆனது.
@@@@@@@@
விமானத்தில வர்ற போதே செய்தித்தாளல
'சோப்ராஜ்'னு (Sobhraj) ஒரு பேரைப் பார்த்தேன்.
அந்தப் பேரையே எம் பையனுக்கு வைக்கப்
போறோம் பாட்டி.
@@@@@@@@
அதென்ன சோப்புடா? துணிச் சோப்பா, குளிக்கிற
சோப்பா?
@@@@@@
சோப்பெல்லாம் இல்லை பாட்டி. அர்த்தம் இல்லாத
பேரு.
@@@@@
அப்ப சரி. அர்த்த்மில்லாத இந்திப் பேரு.
சிந்தாபாத்துடா தன்னுராசு