ரவுடிகள் ஓட்டம்

தலைவரே நம்ம கட்சி காலியாகிருச்சுங்க

தலைவரே!

@@@@@

என்னடா சொல்லறே?

@@@@

நாம கட்சிலே மாநிலத்தில் உள்ள

ரவுடிகளை எல்லாம்


சேர்த்தோம்..அவுனுகளுக்கு எல்லாம்

எல்லா பதவிகளையும் கொடுத்து சகல

வசதிகளையும் பண்ணிக் கொடுத்தோம்.

இருந்தாலும் ராஜினாமாக் கடிதத்தைத்

தலைமை நிலையத்துக்கு அனுப்பிட்டு

நம்ம கட்சியவிட்டு ஒடிட்டானுக.

நன்றிகெட்ட பயல்கள்.

@@@@@@@

எந்தக் கட்சிக்குடா அந்த ரவுடிப் பயல்கள்

போனாங்க?

@@@@@@@

ரவுடிங்களே ஒரு கட்சியைத்

துவக்கிருக்கறாங்க. தேர்தல இளம்

ரவுடளை எல்லாத் தொகுதிகளிலும்

நிறுத்தப் போறாங்களாம். இதுவரை

எந்த வழ்க்கிலும் தண்டனை பெறாத

ரவுடிகளே அவுனுக கட்சியின்

வேட்பாளர்களாம்.

@@@@@@@

என்னடா சொல்லற? தேர்தல் வெற்றிக்கு


உறுதியான உத்தியா ரவுடிகளுக்கு

முக்கியத்துவம் கொடுத்து அவுங்களைக்

கட்சில சேர்த்து பதவிகளில் அமர

வைத்தேன். இப்ப நம்ம வெற்றிக் கனவு

பகல் கனவாப் போயிருச்சே நான் என்னடா

செய்வேன். ஊடகங்களுக்கு நம்ம கட்சி

உருப்படாத கட்சியாய்த் தெரியுமே. டேய்

மண்டைக் கண்ணா என் நம்பிக்கை

நட்சத்திரமே நாமலும் அந்த ரவுடிகள்

கட்சில சேரலாமானு கேட்டுட்டு வாடா.

எனக்குக் கொள்கை பரப்புச் செயலாளர்

பதவி அல்லது செய்தித் தொடர்பாளர்

பதவியாவது தரச்சொல்லிக் கேட்டுட்டு

வாடா. அந்தக் கட்சியின் தேர்தல் செலவை

நான் தர்றேனு சொல்லுடா.

நீ என்ன செய்வயோ எனக்குத்

தெரியாது. எனக்கு ரவுடிகள் கட்சில

ஆலோசகர் பதவியாவது தேவை. செய்து

முடிடா மண்டைக் கண் செயல் வீரா.

@@@@@@

செய்கிறேன் என் நிரந்தரத் தலைவரே.

என்னை நம்புங்கள். என் உயிர்

உள்ள்வரை உங்களுடன் தான்

நானிருப்பேன்.

எழுதியவர் : மலர் (24-Dec-24, 7:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 4

சிறந்த நகைச்சுவைகள்

மேலே