RAMALAKSHMI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAMALAKSHMI
இடம்:  DINAMANI NAGAR
பிறந்த தேதி :  17-Apr-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Oct-2018
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  12

என்னைப் பற்றி...

ஆசிரியர்
இருபத்து மூன்று வருட ஆசிரிய பணி
நான் என்னை எப்பொழுதும் ஏதாவது வேலையில் ஈடுபடுத்திக் கொள்வேன்.









என் படைப்புகள்
RAMALAKSHMI செய்திகள்
RAMALAKSHMI - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2020 11:48 am

எவரையும் என்றும்
எள்ளளவும் எக்காரணத்திலும்
எத்துயரமும் இன்றி
எளிமையாக நடத்தும்
எல்லையற்ற மனிதநேயம் !

உணவு உடை உடைமை
உல்லாசமாக பகிர்ந்து
உன்னத உயிர்களை
உளமாற வாழ வைக்கும்
உன்னத மனிதநேயம் !

உணர்வை மதிக்கும்
உறவை மதிக்கும்
உயிரை மதிக்கும்
உயர்ந்த மனம்
விலை மதிப்பற்ற
மகத்துவ மனித நேயம்!

மேலும்

RAMALAKSHMI - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2020 2:34 pm

தாவரங்கள் ஏங்கின
விலங்குகள் ஏங்கின
பறவைகள் ஏங்கின
மிதிவண்டியும் ஏங்கின
பேருந்தும் ஏங்கின
உடை ,உடைமைகள் ஏங்கின
காலணிகளும் ஏங்கின
அலுவலகமும் ஏங்கின
மனிதா உன் வரவை எண்ணி
விழி மனிதா விழி
பிரபஞ்சமே
உன் வரவை எதிர்பார்த்து
முடக்கத்திற்கே முணுமுணுப்பு
முற்றிலும் முடங்கினால்
முற்றிலும் சிந்தி
உனது சேவை
அனைத்திற்கும் தேவை
முடியும் வரை முயலுவோம்
கடவுளின் அற்புத படைப்பில்
அவரவர் பணிகளை
அன்றாடம் முடித்து
அனைத்து கடமைகளையும்
அல்லலின்றி செய்து
அமைதி அடைந்து
ஆயுளை முடிப்போம்
அதுவரை எந்த பேரழிவும்
இடையூறில்லாமல் இன்னல் செய்யாமல்

இனிதே வாழ
இறைவனை பிரார்த்திப்போம்!

மேலும்

RAMALAKSHMI - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2020 2:24 pm

உங்களின் உன்னத பங்கு
உறங்கா உலகிற்கே!
உங்களின் உத்தம உயர்வு
உறங்கா உலகிற்கே!
உங்களின் ஊக்கமிகு வளமை
உறங்கா உலகிற்கே!
உங்களின் உயர்வான வல்லமை
உறங்கா உலகிற்கே!
உன்னத உரங்களான நீங்கள் !
உலகின் மேன்மையான மரங்கள்!
உடல் தூய்மை ! உடையவரின் தூய்மை!
உறைவிட தூய்மை!
உங்களின் தூய்மை!
உலகை போற்றுமே!
உன்னத உங்கள் பங்கு மட்டுமல்ல,
உண்மையான உங்களின் உள்ளங்கள் !
உலகின் சுகாதாரமே!

மேலும்

RAMALAKSHMI - Shibhi Selvan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2019 5:30 pm

தென்னகத்துச்சூரியன்

மேலும்

தெற்கு+அகம்+சூரியன் 02-Jun-2019 1:32 pm
தெற்கு + இடத்து + சூரியன் 01-Jun-2019 12:57 am
தெற்கு+ அகத்து+ சூரியன் 30-May-2019 9:35 pm
இதை பிரிக்கவே முடியாது ! 28-May-2019 8:20 pm
RAMALAKSHMI - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2019 9:27 pm

ஓடியாடும் குழந்தைக்கும்,
கூடி திரியும் இளையவர்க்கும்,
வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்க்கும்,
செடி கொடிகளுக்கும் விலங்கிற்கும்,
நிம்மதியின் புகலிடம் இனிக்கும் இரவுதான் !!

மேலும்

RAMALAKSHMI - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2019 8:22 am

வாழ்த்துகள் வாழ்த்துக்கள்

௧ எது சரி ?

௨ நீங்கள் எதைப் பயன் படுத்துகிறீர்கள் ?

௩. புணர்ச்சி விதி நன்னூல் சூத்திர விளக்கத்துடன் தெரிந்தவர்கள் சொல்லவும்.

மேலும்

23 வருட ஆசிரியப் பணியில் இருப்பவர்களே தெரியலேன்னு சொன்னா அனா ஆவன்னா படித்த மாணவர்கள் நாங்கள் யாரிடம் போய்க் கேட்பது ? தினமணி ன்னு ஒரு செய்த்திப் பத்திரிக்கை உண்டு . தினமணி நகர் ன்னு ஒரு ஊர் தமிழ் நாட்டில் இருக்கிறதா எந்த மாவட்டத்துல ? எங்ஙன ? தெரியாதோரையும் வாழ்த்துகிறேன் தெரிந்தோரையும் வாழ்த்துகிறேன் . தெரிந்த இன்னொரு ஆசிரியரிடம் கேட்டுச் சொன்னால் அவரையும் வாழ்த்துவேன் . வாழ்த்துகள் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய ஆசிரியை ராமலக்ஷ்மி . ராம லக்ஷ்மியா ரமா லக்ஷ்மியா ? இதுவும் தெரியாது என்று சொல்லாதீர்கள். 11-May-2019 7:44 am
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தெரிய வில்லை 10-May-2019 10:32 pm
நீங்கள் பயன்பாட்டில் உள்ள இதுபோல் சொற்களை எப்படிப் பயன் படுத்துகிறோம் என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் , குற்றியலுகரம் முற்றியலுகரம் கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள் . சிறப்பு தோப்பு மரக் கூட்டத்தைக் குறிக்கும்.தனி மரம் தோப்பாகுமா என்ற பழமொழியும் உண்டு . மா தென்னைத் தோப்புகள் இந்த ஊரில் ஏராளம் என்று சொல்லும்போது கள் பன்மையை குறிக்கும் விகுதி. பனந் தோப்புக்கள் அருந்தி மயங்கிக் கிடக்கிறான். தோப்பு + கள் = தோப்புக்கள் என்று புணர்ச்சி விதிப்படி வல்லொற்று மிகுந்து புணர்ந்தொலிக்கிறது. கள் இங்கே பானத்தைக் குறிக்கும் சொல். பன்மை விகுதியில்லை . அப்படியானால் கள் பன்மை விகுதி எனின் ஒற்று மிகதா ? பின் பசுவின் பன்மை பசுக்கள் ஆகிறது அதெப்படி ? வேறு யாராவது சொல்கிறார்களா பார்ப்போம் மிகுந்த உற்சாகம் எடுத்துக் கொண்டு பதிலிறுத்த கவிப்பிரிய நன்னாடனுக்கு மிக்க நன்றி வாழ்த்து( க் )கள் , 16-Apr-2019 4:21 pm
ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா? இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம். இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன.. நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி? இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம். 1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது.. உதாரணம்.. மாடு , ஆடு .... இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது.. 2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்.. பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது ) 2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது.. செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும் 3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது.. வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று ) கணக்கு - கணக்குகள் நாக்கு - நாக்குகள் வாத்து- வாத்துகள் வாழ்த்து - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு ) உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை. தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம் அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும். வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் சரியா? 16-Apr-2019 12:32 pm
RAMALAKSHMI - Selvamani அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2019 6:05 am

ஏன் எப்பொழுதும் திருமண ஏற் பாட்டில் பெண் வீட்டாருக்கு மட்டும் இத்தனை மன உளைச்சல்?

மேலும்

பெண் வீட்டார் பெண்ணை வேறு வீட்டுக்கு அனுப்பும் போது மன உளைச்சல் இயல்புதானே திருமணம் எடுத்து நடத்துபவர் ஆண் வீட்டார் எனில் அவர்களுக்கும் மன உளைச்சல் உண்டு. ஆயிரம் காலத்து பயிர் அல்லவா திருமணம் 10-May-2019 10:30 pm
RAMALAKSHMI - Dr A S KANDHAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2019 1:10 am

(1)நண்பர்கள் , இவர் பின் தொடர்பவர்கள் , இவரை பின் தொடர்பவர்கள் எனும் மூன்று வகைகளுக்குள் என்ன வேறுபாடு ?
(2) நண்பர் பரிந்துரை என்பது என்ன ?

மேலும்

கருத்திட்ட கவிப்பிரிய இராமலட்சுமி அவர்களுக்கு நன்றி .. நாம் பின்தொடர்ந்தால் அவர்களின் படைப்பு நம் பார்வைக்கு வரும் நம்மை அவர் பின் தொடர்ந்தால் நம் படைப்பு அவர் பார்வைக்குப் போகும் .. என்பதாக உணர்கிறேன் .. .. நண்பர்களின் படைப்புக்கள் நம் பார்வைக்கு வருமா ? நண்பர் பரிந்துரை என்று ஒரு உறுப்பினர் பெயர் வருகிறது .. அவர்களை பரிந்துரை செய்தது யார்? இப்படி இன்னும் கேள்விகள் ... தெரிந்தவர் விளக்கினால் நன்றிகள் ... 10-May-2019 11:21 pm
1நண்பர்கள் -நம்முடன் என்றும் இருப்பவர்கள் இவர் பின் தொடர்பவர்கள்-நம்மை பார்த்து நடப்பவர்கள்(செயலாற்றுபவர்கள்) இவரை பின் தொடர்பவர்கள்-சிலரை பார்த்து நடப்பவர்கள்(செயலாற்றுபவர்கள்) 2நட்பு வேண்டி விண்ணப்பிப்பது 10-May-2019 10:26 pm
RAMALAKSHMI - RAMALAKSHMI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2019 10:13 pm

அனைத்து  அன்பானவர்களுக்கும்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

மேலும்

RAMALAKSHMI - RAMALAKSHMI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2019 10:19 pm

ஏமாந்த மனது
ஏக்கத்தின் முடிவில்
கற்றுக்கொடுத்தது
வாழ்வின் வழி ஒன்றல்ல
பல்நோக்கு பார்வை
பலரின் அறிவுரை
பல நல்ல உள்ளங்கள்
இது மட்டும் மூலதனம்
சாதிக்கலாம் வாழ்வில்
பலகோடி சாதனை..........

மேலும்

ஆம்! ஆம்! சாதிக்கலாம்! நல்லவராகவும், வல்லவராகவும் வாழ கற்றுக்கொண்டால்.. 07-May-2019 2:14 pm
முரண்பட்ட சமூகத்தில் முயற்சிதான் வெற்றி 03-May-2019 11:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே