கார்த்திக் ரத்தினவேல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திக் ரத்தினவேல் |
இடம் | : அருப்புக்கோட்டை |
பிறந்த தேதி | : 26-Jan-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 4532 |
புள்ளி | : 20 |
தமிழன்
உப்பிட்ட நீரினைப் பொழியும் முத்துக்கள்
உப்பிட ஊனின்றி தவிக்கும் நெஞ்சங்கள்
உவப்பாய் பாயும் வியர்வைத் துளிகள்
உள்ளம் திகைக்கும் முரணான வழிகள்
உடலைப் பிழியும் பசிக் கொடுமை
இதுவே இந்நாள் ஏழ்மை நிலைமை .
ஆண்டவனே ஓய்வில் ஆழ்ந்திருக்கும் வைகறையில்
இறைவழியைக் குறுக்கிடும் பாதை வழியே
பரந்த இருளான இரவினைத் தோலுரித்து
அந்தாதி அற்ற ஆலயமாய் உருப்பெற்று
நீளுகின்ற அமைதியின் விளிம்பில் தோன்றுகிறது
ஒளி கமழும் விடியற் காலை
அகல்வெளியைக் காண தலைதூக்கிய சேவலுக்கு
இருட்கடலை காட்டிய துக்கம் துளிராது
மங்கொளியில் வருகை புரிந்தாள் காவியத்தலைவி
சூரியன் என்னும் ஒளி விளக்காய்....
அகல்வெளியில் ஒளி பரப்பிய பகலவனே
நம்மவரின் மனவெளியில் ஒளியேற்ற மறந்தாயோ!
நாச்சுவை அறிந்து வயிற்றுக்குத் துரோகமிழைக்கும்
குறைகளால் நிரம்பும் அரசியல் - அதனால்
பிழைப்புக்கே ஏங்கும் மக்களின் வாழ்வியல் .
சிலம்பு உரைக்கும் அரசியலோ கடந்துபோனது
சுரண்டித் தின்னும் தலைகளே ஓங்கிநின்றது
அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகுமன்று
அரசியல் குதித்தோர்க்கு பணம் கையூட்டாகும்
நாம் கேள்விக் கட்டுகளை எறிவோமாயின்
அவர்கள் வேள்வித்தீயில் வெந்து போவர்.
தென்னகத்துச்சூரியன்
தென்னகத்துச்சூரியன்
"ஏதோ உலகத்தில் பிறந்தோம் ,தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டை போல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்லக் கூடாது. மாறாக,அக்கட்டையே மண்ணில் ஊன்றி , பெரும் மரமாய் வளர்ந்து,தேவையானால் இறைவழியையும் தடுத்து நிறுத்தி,அதிலிருந்து வீழ்ந்த கிளைகளை மிதக்க செய்து, வேற்றிடத்தில் மரமாக வளர செய்ய வேண்டும் . எப்போதும் கட்டையாய் பிறர் உதவியை நாடியே செல்வோமேயானால் ,எப்போதுதான் வேரூன்றுவது ,நம் தடத்தை பதிப்பது?
ஒருவன் ஓரிடத்தில் கல்லை நட்டி சென்றால் ,அடுத்தவன் அதைக் கும்பிட்டு போடுவான் . அதைப் பார்த்து அறியாமையில் திளைத்த மக்கள் அனைவரும் வரிசை கட்டி முந்தியடிப்பர் . கண் கட்டி திரிவர்;
கண்ணைத் திறந்த இறைவனே ,என்
ஞானக்கண்ணை மறைத்து வைத்திரே
அதை மீட்கச் சென்றவிடத்தில்
கடலாய்ப் பரந்திருந்த கல்வியில்
நீந்தி கரைசேர அழைக்கிறீரே
அறியாமை இருளினைப் போக்கி
ஞானத்தின் ஒளியினை காண
மௌனத்தின் பெருமையை அறிய
நகைப்பின் சுவைப்பினை உணர
எனக்கு வழிதந்த கல்வியே .