ஒளித்தோற்றம்

ஆண்டவனே ஓய்வில் ஆழ்ந்திருக்கும் வைகறையில்
இறைவழியைக் குறுக்கிடும் பாதை வழியே
பரந்த இருளான இரவினைத் தோலுரித்து
அந்தாதி அற்ற ஆலயமாய் உருப்பெற்று
நீளுகின்ற அமைதியின் விளிம்பில் தோன்றுகிறது
ஒளி கமழும் விடியற் காலை

அகல்வெளியைக் காண தலைதூக்கிய சேவலுக்கு
இருட்கடலை காட்டிய துக்கம் துளிராது
மங்கொளியில் வருகை புரிந்தாள் காவியத்தலைவி
சூரியன் என்னும் ஒளி விளக்காய்....

எழுதியவர் : கார்த்திக் ரத்தினவேல் (4-Dec-19, 12:21 pm)
பார்வை : 114

மேலே