பாரதிக்கு எதிராக பாரதியே - ககார்த்திக் ரத்தினவேல்

"ஏதோ உலகத்தில் பிறந்தோம் ,தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டை போல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்லக் கூடாது. மாறாக,அக்கட்டையே மண்ணில் ஊன்றி , பெரும் மரமாய் வளர்ந்து,தேவையானால் இறைவழியையும் தடுத்து நிறுத்தி,அதிலிருந்து வீழ்ந்த கிளைகளை மிதக்க செய்து, வேற்றிடத்தில் மரமாக வளர செய்ய வேண்டும் . எப்போதும் கட்டையாய் பிறர் உதவியை நாடியே செல்வோமேயானால் ,எப்போதுதான் வேரூன்றுவது ,நம் தடத்தை பதிப்பது?
ஒருவன் ஓரிடத்தில் கல்லை நட்டி சென்றால் ,அடுத்தவன் அதைக் கும்பிட்டு போடுவான் . அதைப் பார்த்து அறியாமையில் திளைத்த மக்கள் அனைவரும் வரிசை கட்டி முந்தியடிப்பர் . கண் கட்டி திரிவர்;கொழுந்து விட்டு எரியும் அறியாமை நெருப்பு.கல்லைத் தெய்வமாக கருத்தியதும் நாமே ; அதே கல்லுக்கு கையூட்டளித்து செயலை செய்யுமாறு வேண்டியதும் நாமே ; இறுதியில் செயல் நடக்காவிட்டால் அதை ஒதுக்கி தள்ளுவதும் நாமே .
"இறைவன் எதையும் படைக்கவில்லை
நாம்தான் இறைவனைப் படைத்தோம்
அவன் உருவத்தை மட்டுங்காத்து
அவன் பெயரைச் சொல்லி
பலவற்றை அளித்தோம் - மீண்டும்
அவனிடமே வந்து நிற்கிறோம்
அழித்த காரணத்தை அறிவதற்காக..."
இது சாத்தியமா? ஒன்றை மனதில் சித்தரித்துக்கொண்டு , அது நிஜமாக நேரில் வரவேண்டும் என அழும் குழந்தையைப் போல் அல்லவா இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதான் பாரதி ,"நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்" என்னும் வரிகளை வீசினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது .
இதில் முதலில் கூறப்பட்ட கருத்து பாரதியின் கருத்துக்கு எதிரானது . பாரதி தனது "யாரைத் தொழுவது?" என்னும் கட்டுரையில் ,"ஏதோ உலகத்தில் பிறந்தோம் ,தெய்வம் விட்டதே வழி என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டையைப் போல் மிதந்து செல்ல வேண்டும் " என்கிறார் . ஆனால்,தன்னுடைய கருத்தைஏ எதிர்க்கும் விதமாக தனது பாடலில் ,"நெஞ்சு பொறுக்குதில்லையே " எனப் பாடியுள்ளார் . ஒருவருடைய மனம் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொன்டே இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும் . அதற்க்கு ,பெரிய கவிஞர்களோ அறிஞர்களோ மட்டும் விதிவிலக்காக இல்லை.அவர்களும் அதில் அகப்பட்டவர்கள் தான்.
பாரதியை பெரிய பெரிய அறிஞர்களாலேயே புரிந்து கொள்ள இயலாத பொது,நம்மால் மட்டும் எப்படி முடியும்?
அவர் தமிழுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் . தமிழனுக்குக் கிடைத்த இறையன்புத் தோழன் . அவர் இறைவழிபாட்டை எதிர்க்கவில்லை..அவரே தனது கடவுளாக,பராசக்தியை மனமார வணங்கினார்.ஆனால், அவர் பல தெய்வங்கள் தோன்றி , பல சம்பிரதாயங்களை உருவாக்கி,அறியாமை வலையில் தமிழன் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்க்காகவே,
அவர்,
"ஆயிரமாயிரம் தெய்வங்கள் தேடி
அலையும் அறிவிலிகாள்
அறிவொன்ரே தெய்வம் -சுத்த
அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ " எனப் பாடினார்.
பாரதியை கடவுள் நண்பன் என்று சொல்லவா ? கடவுள் எதிர்ப்பாளன் என்று சொல்லவா? ஆத்திகன் என்று சொல்லவா?நாத்திகன் என்றுரைக்கவா? அவனை என்னவென்று சொன்னாலும் , அவர் கூறிய கருத்துக்கள் வேறுபட்டு வந்தாலும்,கருத்தாழம் புதைந்துள்ளது என்பதை அறிய வேண்டும் .
அவர் ஒன்றும் கண்ணை மூடிக் கண்மூடித்தனமாக பாடவில்லை.நம் கண்களைத் திறப்பதற்காக அரும்பாடுபட்டார்.
"பாரதிக்கு எதிராக பாரதியேதான் நிற்க முடியும்,
வேறு யாரால் அவரை எதிர்க்க முடியும்?" இதுவே தலைப்பிற்க்கான காரணம் .
பாரதி வாழ்க! -க.கார்த்திக் ரத்தினவேல்

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (3-Mar-19, 2:29 pm)
பார்வை : 232

சிறந்த கட்டுரைகள்

மேலே