கல்வி

கண்ணைத் திறந்த இறைவனே ,என்
ஞானக்கண்ணை மறைத்து வைத்திரே
அதை மீட்கச் சென்றவிடத்தில்
கடலாய்ப் பரந்திருந்த கல்வியில்
நீந்தி கரைசேர அழைக்கிறீரே

அறியாமை இருளினைப் போக்கி
ஞானத்தின் ஒளியினை காண
மௌனத்தின் பெருமையை அறிய
நகைப்பின் சுவைப்பினை உணர
எனக்கு வழிதந்த கல்வியே .

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 4:52 pm)
Tanglish : kalvi
பார்வை : 8618

மேலே