பிரபஞ்சத்தின் EDIROLI
தாவரங்கள் ஏங்கின
விலங்குகள் ஏங்கின
பறவைகள் ஏங்கின
மிதிவண்டியும் ஏங்கின
பேருந்தும் ஏங்கின
உடை ,உடைமைகள் ஏங்கின
காலணிகளும் ஏங்கின
அலுவலகமும் ஏங்கின
மனிதா உன் வரவை எண்ணி
விழி மனிதா விழி
பிரபஞ்சமே
உன் வரவை எதிர்பார்த்து
முடக்கத்திற்கே முணுமுணுப்பு
முற்றிலும் முடங்கினால்
முற்றிலும் சிந்தி
உனது சேவை
அனைத்திற்கும் தேவை
முடியும் வரை முயலுவோம்
கடவுளின் அற்புத படைப்பில்
அவரவர் பணிகளை
அன்றாடம் முடித்து
அனைத்து கடமைகளையும்
அல்லலின்றி செய்து
அமைதி அடைந்து
ஆயுளை முடிப்போம்
அதுவரை எந்த பேரழிவும்
இடையூறில்லாமல் இன்னல் செய்யாமல்
இனிதே வாழ
இறைவனை பிரார்த்திப்போம்!