மனித நேயம்

எவரையும் என்றும்
எள்ளளவும் எக்காரணத்திலும்
எத்துயரமும் இன்றி
எளிமையாக நடத்தும்
எல்லையற்ற மனிதநேயம் !

உணவு உடை உடைமை
உல்லாசமாக பகிர்ந்து
உன்னத உயிர்களை
உளமாற வாழ வைக்கும்
உன்னத மனிதநேயம் !

உணர்வை மதிக்கும்
உறவை மதிக்கும்
உயிரை மதிக்கும்
உயர்ந்த மனம்
விலை மதிப்பற்ற
மகத்துவ மனித நேயம்!

எழுதியவர் : ரா. ராமலெட்சுமி (2-Jul-20, 11:48 am)
சேர்த்தது : RAMALAKSHMI
Tanglish : manitha neyam
பார்வை : 56

மேலே