நம் பிள்ளைகள் நம் தொருவில் விளையாட எவனோ இங்குவந்து...
நம் பிள்ளைகள்
நம் தொருவில் விளையாட
எவனோ இங்குவந்து தடைபோட்டன்!
உறுதியாக ஒன்றினைந்து
இறுதிவரை போராடி
வென்றார்கள் அவர்கள்
இளம் பட்டாளம்!
அவர்களின் வாழ்வுக்கு
அவர்களே மாற்றம் போட்டார்கள்!
நாடாண்ட கும்பல்
பன்னிய அட்டுழியம்
நெருப்பாக நெஞ்சில்
இன்னும் இருக்கிறது!
என் தமிழா! இளைஞா!
பித்தலாட்டம் செய்தேனும்
நாடால துடிக்கும்
பதவிக்கு பாய்ந்துவரும்
நயவஞ்சக நரிக்கூட்டம்!
தான் செழிக்க
தமிழகம் அழிக்க
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா
நாளையும் உன் நாடும்? வீடும்?
விட்டுவிட்டதனால்..
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்!
நம் அனைவரின் உழைப்பை
தின்று கொழுக்கும் களைகள்!
தூக்கியெறி துரோகிகளை
விரட்டியடி வெறியர்களை
புதியவர்கள் இளையவர்கள்
நல்லவர்கள் நன்மைசெய்ய
மாற்றம் அமைப்போம்!
மாற்றம் வரவைப்போம்!
நல்ல தமிழினம் அமைப்போம்!
நம்மை புதிதாக வளர்ப்போம்!