என் இந்தியமே

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
எங்கள் இந்திய மண்ணில் சுதந்திரம்!!!
எவருக்கும் இங்கு வாய்க்கவில்லை
காந்தியார் கண்ட சுதந்திரம்!
ஏழைகளை ஏய்க்கும்
பணப்பித்தர்களுக்கோ சுதந்திரம்
பெண்ணினம் பதறும்
காமுக கயவர்களுக்கோ சுதந்திரம்?
மக்கள் நலம் மறந்து
தன்னலமே தலைதூக்கும்
சுயநல அரசியலுக்கோ சுதந்திரம்?
எங்கும் அவலம்
கண்ணை குத்தும்போது
தேசியக்கொடியும் வெறும்
துணியாகவே தெரிகிறது!
சுதந்திர நாளும் வெறும்
நாளெனவே செல்கிறது!
காடழித்தீர்! ஆறழித்தீர்!
மலையழித்தீர்!
மண்வளமழித்தீர்!
தவித்து திகைத்து
மண்காக்க மரம்காக்க
மக்கள்கூடி நின்றால்
உயிரெடுப்பதோ உங்கள் சுதந்திரம்?
ஏ இந்தியமே!
நாங்களும் உங்களில்
ஒருவரல்லவோ?
நாங்கள் வாழவழியற்றுநின்றால்
உங்களின் வாழ்வும்
திக்கற்றுப்போகும்!
உண்மை உண்மை!
இதுவே உண்மை!
உங்களின் போக்கை மாற்றுங்கள்
நல்ல மாற்றம் வரும்!
இயற்கையை வளர்த்து
இயற்கையோடு வாழ்வோம்!
நம் வாழ்க்கையை
நாளைய உலகம் பேசட்டும்!
தன்மான தமிழனின்
எச்சரிக்கை இது
என் இந்தியமே!
வாழு வாழவிடு
என் இந்தியமே!
என்றும் ஒற்றுமையோடு
வாழ்வோம் வளம்பெறுவோம்!

எழுதியவர் : இரெத்தினசபாபதி தமிழன் (15-Aug-19, 2:19 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 274

மேலே