சுதந்திரத் திருநாள்

அனைவருக்கும்...
சுதந்திரத் திருநாள்
நல் வாழ்த்துக்கள்...

எந்த நாட்டினருக்கும் அந்த
நாட்டின் சுதந்திரம்  தொடர்பாய் 
மூன்று காலத்தவர் இருப்பர்...

போராடிப் போராடி கனாக்களில் 
மட்டுமே சுதந்திரம் கண்டு 
கண்களை மூடியவர்கள்... 
போராடிப் பெற்று அந்த
சுதந்திரத்தை சுகித்தவர்கள்..
சுதந்திரம் பெற்றபின்
மண்ணில் தோன்றி சுதந்திரம் 
அனுபவிப்பவர்கள்...

பெற்ற சுதந்திரம்
பேணிக் காப்பதில்
மூன்றாம் வகையினருக்குப்
பொறுப்புகள் அதிகம்... 

வல்லரசு நாடுகளைவிடவும் 
வளர்ச்சி அடைந்து 
வல்லமை அடைய 
நம் அன்புக்குரிய முன்னாள் 
குடியரசுத் தலைவர் 
டாக்டர் அப்துல்கலாம் 
அவர்கள் சொன்ன 
ஐந்து அம்சங்கள்... 

விவசாயமும் உணவுப்பொருள் 
பதனிடுதலும்... 
கல்வியோடு சுகாதாரம்...
மிகை மின்சாரம்... 
தகவல் தொழில்நுட்பம்...
தேசப்பாதுகாப்பு அலகுகளை 
பாதுகாப்போடு ஆக்கப்பணிகளுக்கும் 
அனுகூலமாய்ப் பயன்படுத்துதல்...
ஆகியவற்றில் அனைவரும்
ஒன்றுபட்டு உழைத்தால்
வல்லரசு சாத்தியமே...

அனைவருக்கும் வேலை என்பது 
வேலை தேடுபவர்களின்
வேண்டுகோளாய் இல்லாமல் 
வேலைகள்.. தேடுபவரைச்
சென்றடைவதாய் இருந்தால்
நல்லரசும் சாத்தியமே...

மனிதவளம் மண்ணில் இங்கு
முழுமையாய்ப் பயன்பட்டாக வேண்டும்...
ஆள்பவரும் ஆளப்படுபவரும்
அதற்குரிய தளங்களைக் கண்டறிய வேண்டும்...

அரசியலிலும் அரசாங்கத்திலும் 
கர்மவீரர்கள்.. காமராஜர்களும்
அப்துல் கலாம்களும்
அதிகம் அதிகம் 
உருவாகிட வேண்டும்... 
இது ஒன்று போதும்... அதைவிட 
வேறென்ன வேண்டும் 
நல்லரசு... வல்லரசு...
இந்தியா உருவாகிட...

விண்ணில் சூரியனை விற்றுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?

வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர்
வேறொன்று கொள்வாரோ?

பாரதி வரிகள்...
நமக்கு இன்னும் ஒவ்வொரு
சுதந்திர தினத்திற்கும்
பார்ட்டி வைக்கிறது...

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே...

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இதுநமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரிபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்...

தான் வாழ்ந்த நாட்களில்
கிடைத்திடவில்லை சுதந்திரம்
தன் நாட்டிற்கு... இருந்தும்
அதைக் கிடைத்து விட்டதாய்க்
கற்பனை செய்து கொண்டாடிக்
கொண்டாடிக் கூத்தாடுகிறார்...
நாட்டிற்காகவே தன்
முழு வாழ்வையும்
அர்ப்பணித்து வாழ்ந்த பாரதி...

நம்மிடம் இருப்பது
கிள்ளிப் பார்த்தாலும்
நிஜமாகவே கிடைத்துவிட்ட
வீர சுதந்திரம்...
கொண்டாடுவோம் அதை என்றும்...

சாதனைகளைக் கொண்டாடுவோம்..
சாதிப்பதற்கும் திட்டமிடுவோம்... 
அனைவருக்கும் சுதந்திரத்
திருநாள் நல் வாழ்த்துக்கள்! 

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்...
😀👍💐🌹🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (15-Aug-19, 9:43 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 67

மேலே