வெல்க அதற்கும் மேலாக
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை...
வள்ளுவரின் நானூறாவது
குறள் இது... மிருதுளாவின்
நூறாவது வயதிலும்
அதுவே ஆகட்டும்...
பள்ளிக்கூடப் படிகளில்
மிருதுளாவின் காலடிகள்.. அது
அவளை உயர்த்தட்டும்
வாழ்வில் பல படிகள்...
படிக்கும் காலமெல்லாம்
எப்போது பள்ளி செல்வோம்...
எனும் ஆர்வம் தினம் தினம்
ஓங்கி வளரட்டும்...
கல்வி தன்னால் வளரும்...
கற்றனைத் தூறும் அறிவில்
மிருதுளா அறிவுப் பசியாறட்டும்...
அதில் அவள் ஆனந்தம்
மிகக் கொள்ளட்டும்...
மிருதுளா...
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக...
வெல்க அதற்கும் மேலாக...
வாழ்த்துக்கள் பல...
👍👏💐🙏🌹😃