வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் - முத்தொள்ளாயிரம் 5 - சேரன் 5 - நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார்
தங்கோலம் வௌவுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என! 5
பொருளுரை:
மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா?
பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா?

