தத்தளிக்கும் தமிழ்

ஆங்கிலம் கடைய
அமெரிக்கா மத்தளிக்குது
இந்தி வளர அரசு
முத்தளிக்குது
தமிழைப் படித்தால்
முகத்தில் குத்தளிக்குது
ஆங்கிலம் படித்தால் உலகம் சொத்தளிக்குது
தமிழ்நாட்டில் நுழைந்து
இந்தி வித்தளிக்குது
இரண்டும் வந்ததால்
தமிழ் இங்கே தத்தளிக்குது

ஏன் தமிழ் தத்தளிக்கிறது
உலகின் எல்லா மூலையிலும்
தமிழ் உள்ளது
தமிழனின் மூளையில்
மட்டும் இல்லை

இந்தியா சிறந்தது
இந்தி யா சிறந்தது

அறச்செயல் புரிய
தமிழை யாரும் பயன்படுத்தவில்லை
அரசியல் செய்யவே
தமிழைப் பயன்படுத்துகின்றனர்

தாது கலங்கும்
தமிழை வெள்ளை அடிக்காது
தாதுப்பொருட்களை
கொள்ளை அடித்தால்
தமிழ் எப்படி வளரும்

எழுதியவர் : புதுவை குமார் (17-Aug-19, 6:17 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : thathalikum thamizh
பார்வை : 139

மேலே