சித்திரவேல் அழகேஸ்வரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சித்திரவேல் அழகேஸ்வரன் |
இடம் | : கொழும்பு - இலங்கை |
பிறந்த தேதி | : 01-Nov-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-May-2010 |
பார்த்தவர்கள் | : 415 |
புள்ளி | : 36 |
என் சிந்தையில் உருவாகி
உள் மனதில் கருவாகி
விரல் வழியே எழுத்துருவாகி
இத்திரையினூடாக வலம்வந்து
உங்கள் விழித்திரையினுள் உட்சென்று
கருத்தினில் கலந்திடும்
என் காவியங்களை
வாசிப்பதோடு (இரசித்து)
கருத்துக்களையும் தெரிவியுங்கள்!
நன்றியுடன்......
சித்திரவேல் அழகேஸ்வரன்
( “நறுமுகையே நறுகையே.....” இருவர் - திரைப்படத்தில் இடம்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலின் இசையோடு
இந்த வரிகளை பாடி பாருங்கள். நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள்
குறை இருந்தால் கூறுங்கள்)
(( என் முயற்சி ))
மதிமுகமே மதிமுகமே நீயொரு புன்னகை தந்தாய்
மார்கழி நல்கிய குளிரினைப்போல் என்னுடல் சிலிர்த்திடச் செய்தாய்
நாணம் நிறைந்த விழிகளிலே நானும் வந்து வீழ்ந்திடவே
தாபம்தீர்க்கும் பார்வைதனை நீதா //
கோன்மகனே கோன்மகனே தாமொரு சேதியை கேளாய்
பிடியதன் பிடியையும் வென்றவனே பெண்மையின் உறுதியை உணர்வாய்
காதல் கரத்தால் உனைபிடித்து உள்ளம்உரசிட உனையணைத்து
என்னுள்உனை பிடித்துக்கொண்டேன் நாதா //
ஏக்கம் வாழ்வை வென்று தருமோ
ஊக்கம் வீழ்ந்திட வழி சமைத்திடுமோ
நீக்கம் செய்திடு துயர்களை மனதினில்
ஆக்கம் படைத்து உயர்ந்திடு புவிதனில்
'வாசகர்களிடம் ஒரு விண்ணப்பம்
கவிதை முடிவுக்கு வரும் முன்
நீங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்!
– நன்றி!'
என் வாழ்வின்
பாதியை கொண்டாயே
என் அறிவுதனை
தற்காலிகமாய் கொன்றாயே
நிலவொளியோடும் இதமான
காற்றோடும் உன் அரவணைப்பு
உழைத்து களைத்த உடலுக்கு
எல்லை கடந்த மயக்கத்தை நல்கியது
உன் தீண்டலால்
இரவின் நீளமது கழிப்புற்றது
என் மேனியோ
மெய்நிலை மறந்து களிப்புற்றது
உன்னுடனான சங்கமம்
சோகம் மறந்த நிலையில்
சொர்க்கம் நுழைந்த
ஆனந்தத்தை உணர்த்தியது
நீ என்னுடல் மேவியதும்
ஒளியில்லா தருணத்திலும்
விழிகள் பார்வைதனை பெற்றன
கனவுலகே மெய்யுலகென தோன்றின
உன்னுறவால் எனக்குள்
புதிதாய் உற்சாகம் பிறந்தது
சில தெளிவிலா க
செல்வந்தன் பாக்கியராஜாவிற்கு பாராட்டு விழா.
திடல் எங்கும் சனக்கூட்டம். அங்கு பணக்காரர்களுக்கு மட்டும் ஆறு கால்கள். கதிரையின் கால்களையும் சேர்த்து.
வெயிலோ மழையோ எதுவும் தாக்காதவாறு அவர்களுக்கு மட்டும் கூடாரம்.
ஏழைகள் வேலிக்கு அப்பால். காவல்காரர்களின் கண்டிப்புடன் சிலர் தரையில் அமர்ந்திருந்தனர் பலர் நின்றுகொண்டிருந்தனர்.
மேடையில் மாலை மரியாதையுடன் கம்பீரமாக வீற்றிருந்தார் பாக்கியராஜா.
மேடையிலுள்ள ஒலி வாங்கி அவரது புகழ்மாலைகளை பல குரல்களில் வாங்கிக்கொண்டே இருந்தது.
ஒலி பெருக்கி ஊர் முழுதும் அவரது புகழை பெருக்கிக்கொண்டே இருந்தது.
ஒரு வர்த்தகர் 'ஒரு நாள் எனக்கு கடன்கொடுத்தவன் வட்டியை கேட்டு என்
முக்கண்ண னுடனுறைந்து
முத்தெனவே முன்பிறந்து
முச்சங்க மதனையமைக்க
முச்சுடரா யொளியளித்தாய்
மூச்சிரைக்கு மென்யாக்கைதனில்
முக்தி நல்கும் நன்மொழியென
முக்காலமு மருட்கடைவாய்
முழக்கமோடெ ன்னகமிருந்து
முத்தமிழாய் நீ மலர்வாய்
திசையெங்கும் தடையின்றி
அசைந்தோடும் உன் குழல்
இசைதனையே இடையின்றி
அசைபோடும் என் மனம்
தசைகொண்ட மேனியையும்
காந்த விசை போலீர்த்ததுவே
பசைபோன்று உள்ளமது
இசைந்து உன்னோடு ஒன்றிணைந்ததே
எனக்கு நெஞ்சு முழுதும் வேதனையாதான் இருந்தது. நான் பிறந்து கொஞ்ச நாளைக்குத்தான் அம்மாவின் அரவணைப்பு எனக்கு கிடைத்தது. அம்மாவிற்கு என்ன ஆனதோ எனக்கு தெரியாது. என் கூட பிறந்தவங்க யாரையுமே என்னால பார்க்க முடியல. தன்னந்தனியா இருந்தேன். பலர் என்னை வந்து பார்த்துட்டு போவாங்க. ஏன் வர்றாங்க….. எதுக்கு என்னை பாக்குறாங்க….. எதுமே எனக்கு தெரியாது.
அதுபோலவே இவரும் வந்தாரு. என்னை பார்த்தாரு. என்னை தூக்கிக்கிட்டு அவரோட வீட்டுக்கு வந்திட்டாரு. நான் இங்கே வரும்போது அவன் சந்தோஷமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தான். என் சாயல் தான் அவனுக்கும். உடல் முழுதும் பஞ்சு போன்ற வெண்மையான முடி, அழகான கருத்த கண்கள். சி
விறு விறு என்று எல்லா பைல்களையும் சரிபார்த்து விட்டு அவற்றில் தனது கையெழுத்தைப் பொறித்துக்கொண்டிருந்தான் முகுந்தன். “சார்……” என்று கதவைத்தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் “உள்ளே வாங்க” என அழைப்பு விடுத்தான். “பைல் எல்லாம் சரியா சார்? லேட்டாயிடுச்சாம் பொஸ் கொண்டு வரச்சொன்னார்.” ஆபிஸ் பியுன் தலையை சொரிந்து கொண்டு கேட்டான். “இந்தாப்பா எல்லாம் சரி” என பைல்களை கொடுத்துவிட்டு, “போகும்போது அந்த அசிஸ்டண்ட மேனேஜர் போர்ட்ட சரியா மாட்டிட்டு போ.” என உத்தரவும் போட்டான்.
அன்று அவனால் விரைவாகவும், ஒரு மனநிலையிலும் வேலை செய்ய முடியவில்லை. நேற்று இரவு அவன் அம்மா திலகம் பேசிய பேச்சுக்கள் இன்னும் அவன் மனதை வ
''தம்பிக்குட்டி வீட்டுக்கு வந்துருப்பான். விரைவாக வீட்டுக்கு ஓடவேணும். அவன் அழக கண்டு பாடவேணும். நான் இன்புற அவன் முகத்த அடிக்கடி நாடவேணும். அவன் பிஞ்சு கை கால்கள தொடவேணும். அவன் பாதங்களில் என் அன்பு முத்தங்கள இடவேணும். அவன் கழிக்கும் சிறுநீர்த்துளிகள் என் மீது படவேணும். நான் வாங்கிய புதுச்சட்டைய அவனுக்கு போடவேணும். இன்பத்தில மெய்மறந்து நான் ஆடவேணும்.'' என எண்ணிக்கொண்டே பள்ளத்தை நோக்கி வருகின்ற ஆற்றைப்போல் ஆரம்ப பள்ளியிலிருந்து புரண்டோடி வந்தேன்.
''வந்துட்டான் வெளங்காதவன். நீ ஓன் புள்ளய தூக்கிட்டு அந்த அறைக்குள்ள போ! இன்னும் எத்தன நாளைக்கு இவன மேய்க்கப் போறோமோ தெரியலயே....!'' என பாட்டி சித